உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலக சாம்பியனை வென்றார் பிரக்ஞானந்தா; குவிகிறது வாழ்த்து மழை!

உலக சாம்பியனை வென்றார் பிரக்ஞானந்தா; குவிகிறது வாழ்த்து மழை!

சென்னை: உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்றார். விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடந்தது. இதன் 'மாஸ்டர்ஸ்' பிரிவு 12வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செர்பியாவின் அலெக்சி சரணா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இது, பிரக்ஞானந்தாவின் 'ஹாட்ரிக்' வெற்றியானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jwemj84m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மற்றொரு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன், 46வது நகர்த்தலில் வென்றார். 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்ட் மோதிய மற்றொரு 12வது சுற்றுப் போட்டி 50வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்ற இந்திய வீரர்கள் மென்டோன்கா, ஹரிகிருஷ்ணா தங்களது போட்டியை 'டிரா' செய்தனர்.12 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை இடத்தை பிடித்தார். உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் (7.5 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார். ஹரிகிருஷ்ணா (6.0 புள்ளி), அர்ஜுன் (4.5), மென்டோன்கா (4.5) முறையே 8, 12, 13வது இடத்தில் உள்ளனர்.கடைசியில், உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்றார். விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையைப் பெற்றார். பிரக்ஞானந்தாவை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

யார் இந்த பிரக்ஞானந்தா?

* தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஆகஸ்ட் 10ம் தேதி 2005ம் ஆண்டு பிரக்ஞானந்தா பிறந்தார்.*5 வயதில் செஸ் போட்டிகளில் களமிறங்கி, தனது 7வது வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார்.* 2013ம் ஆண்டு பிரக்ஞானந்தா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.* இவர் செஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மக்கள் மனதில் இடத்தை பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

raghu raghuk
பிப் 03, 2025 15:11

அருமை மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்


madhu kanniappan Somasekar
பிப் 03, 2025 14:02

Prag, deteating kugesh....Chennai boy bets another chennai boy


sankaranarayanan
பிப் 03, 2025 13:51

கடைசியில், உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்றார். விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையைப் பெற்றார் பிரக்ஞானந்தாவிற்க்ய் திராவிட அரசு மரியாதை இருக்குமா? அவர்க்கும் உரிய தகுந்த அரசு சன்மானம் கொடுக்கப்படுமா


Kumar Kumzi
பிப் 03, 2025 14:09

பாவம் தம்பி பிரக்ஞானந்தன் நெற்றியில் விபூதி அணிந்து இருப்பதால் கூமுட்டைக்கு பிடிக்காது


Premanathan Sambandam
பிப் 03, 2025 11:36

எந்த பிரபல பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியில் சாதிக்கும் உங்களைப் பார்க்கும்போது, அப்பா, தாத்தா பெயரை வைத்து பிரபலமான அரசியல் வாரிசுகள், சினிமா வாரிசுகள் தேவையில்லாமல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை மனப்பூர்வமான வாழ்த்துக்கள் இன்னும் நிறைய சாதிக்க இறைவன் அருள் புரிவாராக|


Krishnamurthy Venkatesan
பிப் 03, 2025 11:30

சதுரங்க உலகில் இந்தியாவின் பெருமையை மேலும் பிரகாசிக்க செய்கிறார்கள் இன்றைய இளம் வீரர்கள். வாழ்த்துக்கள்.


sridhar
பிப் 03, 2025 11:27

உலகமெங்கும் விபூதி நெற்றியோடு தான் பயணிக்கிறார். புகழின் உச்சியில் இருக்கிறார். இங்கே கொஞ்சம் படிப்பு சம்பாத்தியம் வந்ததும் நம்மில் பலர் ஹிந்து மத சின்னங்களை புறக்கணிக்கிறார்கள். தினமும் அவரவர் சம்பிரதாயத்துக்கு ஏற்றாற்போல் நெற்றியில் அணிவதை ஏன் கேவலமாக நினைக்க வேண்டும். நீரில்லா நெற்றி பாழ். வேறு எந்த மதத்திலும் இல்லாத பெருமையான அடையாளம் இது. இது பரவினால் ஹிந்து உணர்வு தன்னால் வரும்.


Senthil
பிப் 03, 2025 13:22

சாரி சார், அது இந்து அடையாளம் அல்ல, தமிழருக்கு மட்டுமே உரிய அடையாளம் அது. இந்தியாவில் வேறு யாராவது இதுபோல் நெற்றியில் திருநீறு இட்டுக்கொள்கிறார்களா? கேரளாவில் சந்தனம், ஆந்திராவில் நாமம் என வேறு அடையாளங்கள்.


S.kausalya
பிப் 03, 2025 11:24

இவருக்கும், இவரின் ஆசானுக்கும், பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்


Nandakumar Naidu.
பிப் 03, 2025 11:08

வாழ்த்துக்கள், வாழ்க பாரதம், வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்.


கணேஷ் சுப்ரமணியன்
பிப் 03, 2025 11:07

இருவரும் நம் வீட்டு பிள்ளைகள், இருவருக்கும் வாழ்த்துக்கள்


Rajayogan Palanichamy
பிப் 03, 2025 10:32

உலக சதுரங்க சாம்பியன்ஷிப் முதல் இடத்தை வென்றுள்ள திரு பிரக்ஞானந்தா மற்றும் உலக சாம்பியன்ஷிப்பின் தரவரிசையில் இடம் பெற்றுள்ள ஏனைய இந்திய சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


புதிய வீடியோ