உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ் ஓட்டுநர் நடத்துநருக்கு பாராட்டு

அரசு பஸ் ஓட்டுநர் நடத்துநருக்கு பாராட்டு

சென்னை:பயணியரிடம் பணத்தை திருடியவரை பிடிக்க உதவிய ஓட்டுநர், நடத்துநருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.அரசு விரைவு பஸ்சில், கடந்த 13ம் தேதி இரவு, திருப்பதியில் இருந்து துாத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் சென்ற பயணியிடம், வேலுார் புதிய பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றார். இந்த சம்பவத்தில், திருடியவரை பிடிக்கவும், பணத்தை மீட்கவும், போலீசுக்கு ஓட்டு நர் யோனா, நடத்துநர் கவுதலை ஆகியோர் பெரிதும் உதவினர். அவர்களின் செயலை பாராட்டி, அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மோகன் பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி