உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம்: அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை என ரயில்வே விளக்கம்

கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம்: அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை என ரயில்வே விளக்கம்

சென்னை: ரயிலில் இருந்து கர்ப்பிணி நிலை தடுமாறி உயிரிழந்த விவகாரத்தில், ரயிலில் இருந்த அபாய சங்கிலியில் எந்த பிரச்னையும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த மேல நீலிதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர், தனது குடும்பத்துடன் சென்னை திரிசூலம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி(20). திருமணமாகி 9 மாதமாகும் நிலையில் கஸ்தூரி 7 மாத கர்ப்பமாக இருந்தார். சொந்த கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழா மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கடந்த 2ம் தேதி சென்னையில் இருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்9 கோச்சில் கஸ்தூரி மற்றும் உறவினர்கள் 11 பேர் தென்காசிக்கு வந்த போது, ரயிலில் இருந்து நிலைதடுமாறி கஸ்தூரி கீழே விழுந்தார்.போலீசார் தேடுதலில், உளுந்தூர்பேட்டை அடுத்த பூ.மாம்பாக்கம் அருகே கஸ்தூரியை இறந்த நிலையில் கண்டுபிடித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, ரயிலில் அபாய சங்கிலி சரியாக வேலை செய்யவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த விசாரணை குறித்த அறிக்கையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, ரயிலில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறும் கண்டுபிடிக்க முடியவில்லை. ரயிலில் அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை. எஸ்9 பெட்டி உள்ளிட்ட ரயிலில் இருந்த 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக இயங்கி உள்ளது. அபாய சங்கிலியை முறையான அழுத்தத்துடன் இழுத்து இருந்தால் ரயில் நின்று இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

GANESUN
மே 11, 2024 13:32

தவறு செஞ்ச யாரோ தப்பிச்சிட்டு இருக்காங்க, போலீஸ் வேற ஆங்கிள்ல விசாரனை செய்யணும்


Manimaran
மே 11, 2024 05:23

அந்த பெண்ணை தனியாக அனுப்பி இருக்க கூடாது, அதுவும் ஓடும் ரயிலில் ஓடும் ரயிலின் கதவை மூடாமல் வைத்த காவலரின் தவறு என்ன தான் அபாய சங்கிலியை இழுத்தாலும் -km வேகத்தில் செல்லும் ரயில் நிற்க - km எடுக்கும் கதவு மூடி இருந்தால் இந்த சம்பவமே நிகழ்ந்திருக்காதுஎன்ன தான் TTE , காவலர்கள் கதவை மூடினாலும், பயணியர்கள் அலட்சியத்துடன் திறந்து போடுகின்றனர்


Kasimani Baskaran
மே 10, 2024 23:16

கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணால் எப்படி ஓடும் ரயிலில் வாசல் கம்பிகளை பிடித்து வாந்தி எடுக்க முடியும்? புத்தியில்லாத உறவினர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்


தாமரை மலர்கிறது
மே 10, 2024 22:54

அபாயசங்கிலியை முறையாக இழுக்க தெரியாத அளவிற்கு இவரது உறவினர்கள் தத்தியாக இருந்திருக்கிறார்கள் அதனால் தான் இவர் இறந்துபோய் இருக்கிறார் அதற்காக ரயில்வேயை குறை சொல்ல கூடாது உறவினர்களை தான் குறை சொல்ல வேண்டும் எதெற்கெடுத்தாலும் சிறப்பாக செயல்படும் மத்திய அரசை குறைசொல்ல வேண்டும் என்று சிலர் குதித்துக்கொண்டு இருக்கிறார்கள்


முருகன்
மே 10, 2024 22:50

முறையான அழுத்தம் என்ன ஒரு கண்டுபிடிப்பு இந்த மாதிரி ரயில்களை வைத்து கொண்டு நாட்டின் முதல் தேவை அன்றாட மக்கள் பயணம் செய்யும் ரயில்களில் பாதுகாப்பு மேம்படுத்த பட வேண்டும் அதை விடுத்து வாந்தே பாரத் என ஊரை ஏமாற்ற கூடாது


ديفيد رافائيل
மே 10, 2024 22:12

பாதிக்கப்பட்ட நபர்கள் அடுத்தவங்க மீது பழி சுமத்தினாலே அவர்களின் பாதிக்கப்பட்டவர்களின் மீது தான் ஏதோ தவறு அல்லது அசம்பாவிதம் பண்ணியிருப்பானுக அதை மறைக்க இந்த மாதிரி நாடகமாடி diverting பண்ணலாம் Railway police தான் தானாக முன் வந்து இதை விசாரித்து இதுக்கு முடிவு கொண்டு வர வேண்டும்


Sainathan Veeraraghavan
மே 10, 2024 18:51

இதில் ஏதோ வில்லங்கம் உள்ளது போல் தெரிகிறது எல்லா உறவினர்களும் முறையாக காவல் துறையால் விசாரிக்கப்பட வேண்டும்


Siva
மே 10, 2024 21:34

எல்லாம் வல்ல இறைவன் செயல் நல்லதே நினைப்பது நல்லது


Mugi Mugi
மே 10, 2024 17:02

தன் தவறை ஏற்றுக்கொள்ளாத ரெயில்வே துறை இன்னும் எத்தனை உயிர் பலி கேட்கிறதோ


அப்புசாமி
மே 10, 2024 16:49

அமைச்சர்களெல்லாம் கொடியசைத்து ரயில்களை துவக்கி வெச்சுட்டு தாங்கள் மட்டும் சொகுசு விமானத்துல பறப்பாங்க. அபாய சங்கிலி வேலை சென்ஹ்சா என்ன செய்யாட்டா என்ன?


rama adhavan
மே 10, 2024 21:00

உங்களுக்கு என்ன ஆகுமோ அதுதான் நடக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை