பெண்ணை கைது செய்யக்கோரி தனியார் டாக்டர்கள் போராட்டம்
கரூர்:கரூரில், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் பணிகளை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர், வையாபுரி நகரை சேர்ந்தவர் கவின்ராஜ், 40; மருத்துவர். அதே பகுதியில், ஸ்கேன் சென்டர் நடத்துகிறார். ஆக., 16 மாலை, ஸ்கேன் சென்டரில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த பெண் ஒருவர், உடன் வந்த ரமேஷ் என்வருக்கு ஸ்கேன் எடுக்குமாறு, கவின்ராஜிடம் கூறினார். அதில், ஏற்பட்ட தகராறில், அந்த பெண் கவின்ராஜை அடித்தார். புகாரில், கரூர் டவுன் போலீசார், ரமேஷ், அடையாளம் தெரியாத பெண் மீது வழக்கு பதிந்தனர். ஆனால், கைது செய்யவில்லை. இதை கண்டித்து, இந்திய மருத்துவ சங்கம் சார்பில், கரூர் தனியார் மருத்துவமனைகளில், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், நேற்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .