உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு செக்! இதோ அதிரடி அறிவிப்பு

மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு செக்! இதோ அதிரடி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; பள்ளியில் மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது; தாளாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் (POCSO), SSAC அமைப்பு மற்றும் பள்ளிகளில் கல்விசார் / கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஓய்வு (Compulsory Retirement) பணி நீக்கம் (Removal), பணியறவு (Dismissal) மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (Student Safeguarding Advisory Committee) ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் அனுப்பப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தொடர்பான தகவல்களை அனைத்து மாணவர்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்கி கூறுதல் வேண்டும். மாணவர் மனசுப் பெட்டி, 14417 மற்றும் 10980 ஆகிய தொடர்பு எண்கள், மாணவிகள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு; குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (POCSO) சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையத்தால் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியிடப்பட்ட YOU TUBE video-aso பள்ளியில் காண்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்களால் பள்ளி முதல்வர்களுக்கு நடத்தப்படும் மாதாந்திரக் கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.என்.சி.சி,ஜே.ஆர்.சி மற்றும் சாரண-சாரணியர் இயக்கம் போன்ற அமைப்புகள் செயல்படும் பள்ளிகளை முறையாக கண்காணிக்க வேண்டும். இவ்வமைப்புகள் செயல்படும் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பதை பள்ளி ஆய்வு மற்றும் ஆண்டு ஆய்வின் போது உறுதி செய்யவேண்டும். மேலும், போக்சோ சட்டம் குறித்தும் பள்ளி முதல்வர்கள் மூலமாக ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒரு சில மாவட்டங்களிலிருந்து மாணவிகள் மீது ஒழுக்கக்கேடான செயல்பாடுகள் நடை பெறுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. எனவே அனைத்து பள்ளி முதல்வர் , தாளாளர் ,ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், நலத்துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவர்கள் மற்றும் காவல்துறை அலுவவர்கள் ஆகியோர்களைக் கொண்டு பயிற்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
நவ 26, 2024 23:58

பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது மட்டுமின்றி, ஆபரேஷன் செய்து பெண்ணாக அவர்களை மாற்றிவிடுவது மற்ற சிறுமிகளை பாதுகாக்க வழிவகுக்கும்.


என்றும் இந்தியன்
நவ 26, 2024 17:27

திருட்டு திராவிடம்னா திருட்டு திராவிடம் தான் சட்டம் வகுப்பதில்???தனியார் பள்ளிகளுக்கு ஒரு சட்டம் அரசு பள்ளிகளுக்கு ஒரு சட்டம்???சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்று தான் என்று இருக்கவேண்டும்???முஸ்லீம் என்றால் ஒரு சட்டம் கிருத்துவன் என்றால் ஒரு சட்டம் என்று சட்டம் வரையறுக்கப்படவில்லை


Rajarajan
நவ 26, 2024 16:06

அப்போ அரசு பள்ளி ஆசிரியருக்கு விதிவிலக்கு. அப்படித்தானே. ஆஹா, இதுவல்லவோ திராவிட மாடல். அப்படின்னா, அரசு பள்ளி மாணவரின் நிலைமை ?? இப்போ புரியுதா ? அரசு ஊழியர் / அரசுப் பள்ளி ஆசிரியர் / MLA / MP / அமைச்சர்கள் / திராவிட அல்லக்கைகள் மற்றும் திராவிட அனுதாபிகள் தங்கள் வாரிசுகளை ஏன் அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்று.


raja
நவ 26, 2024 15:33

மாணவிகள் இன்டெர்னல் மார்க் போடவில்லை என்றாலோ ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் மாணவிகள் மேல் நடவடிக்கை எடுத்தாலோ நடவடிக்கை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மீது அபாண்டமாக பாலியல் புகார் கொடுக்கிறார்கள் இப்போ இதுவும் சேர்ந்தால் ஆசிரியர்கள் மிகவும் பாவம்...


Sudarsan Ragavendran
நவ 26, 2024 15:10

அப்போ அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு என்ன தண்டனை . முதலில் சஸ்பெண்ட் செய்வதை மாற்றி டிஸ்மிஸ் செய்யவேண்டும். ஆறு மாதங்கள் கழித்து வேலைக்கு வந்து மீண்டும் அதே வேலையே செய்கின்றனர்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 26, 2024 14:43

தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.... அரசுப்பள்ளிகள் விதிவிலக்கா திராவிட மாடலே ????


புதிய வீடியோ