உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

ஸ்ரீவில்லிபுத்துார்: மாணவியரை பாலியல் ரீதியாக தவறாக நடக்க துாண்டிய பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.அருப்புக்கோட்டையில் ஒரு கல்லுாரியில் பணியாற்றியவர் நிர்மலாதேவி. கணிதத் துறை பேராசிரியரான இவருக்கு மதுரை பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித் துறையிலும் செல்வாக்கு இருந்தன. பெரிய பொறுப்பு வகிக்கும் சிலருடன் அனுசரணையாக நடந்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஒரு மாணவிக்கு இவர் மொபைல் போனில் பேசியது, 'ஆடியோ' பதிவாக வெளியே பரவியது.

தவறாக வழிகாட்டினார்

இது போல பல மாணவியருக்கு ஏற்கனவே அவர் தவறான வழிகாட்டியதாகக் கூறப்பட்டது. பெரிய புள்ளிகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிர்மலாவின் மொபைல் போன் பேச்சு அடிப்படையில், 2018ல் அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுரை பல்கலை பேராசிரியர் முருகன், அலுவலர் கருப்பசாமி ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. அப்போது எஸ்.பி.,யாக இருந்த ராஜேஸ்வரி புலனாய்வு செய்து, ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அங்கிருந்து மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. கல்லுாரி செயலர், பாதிக்கப்பட்ட மாணவியர், பேராசிரியர்கள், பல்கலை அலுவலர்கள் உட்பட 84 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்; 192 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 'கோவிட்' பரவல் காரணமாக விசாரணையில் தடங்கல் ஏற்பட்டது. அதன் பிறகும் மந்தகதியில் தொடர்ந்ததால், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வேகம் பிடித்தது

ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. அதையடுத்து விசாரணை வேகம் பிடித்தது. வாரத்தில் மூன்று நாட்கள் விசாரணை நடந்தது. இப்போது, ஐ.ஜி., பொறுப்பு வகிக்கும் ராஜேஸ்வரி மார்ச் 14ல் சாட்சியமளித்தார். ஏப்ரல் 1ம் தேதி இறுதிக்கட்ட வாதம் முடிந்தது. ஏப்., 26ல் தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று நிர்மலாதேவி ஆஜராகவில்லை. பேருந்தில் வந்து கொண்டிருந்த நிர்மலாவுக்கு மயக்கம் ஏற்பட்டதால் வர இயலவில்லை என வழக்கறிஞர் தெரிவித்தார். ஐகோர்ட் கெடு 30ம் தேதி முடிவதால், 29ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்து, நிர்மலாதேவி ஆஜராக தவறினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் எச்சரித்தார். நேற்று காலை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆஜராகினர். மதியம் 1:10 மணிக்கு நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு வாசித்தார். முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என்பதால், இருவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும் இவருக்கான தண்டனை இன்று (ஏப்.,30) அறிவிக்கப்படும் என நீதிபதி கூறியிருந்தார். அதன்படி, இன்று நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். மேலும், நிர்மலா தேவிக்கு ரூ.2.42 லட்சம் அபராதமும் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Parthasarathy Badrinarayanan
மே 03, 2024 21:06

அப்பீல் செய்து சில ஆண்டுகளில் விடுதலை ஆவார் இது நமது நாட்டில் நடக்கும் வழக்கம் கீழ் கோர்ட்டில் உதவியவர்கள் விடுதலை ஆனது போல மேல் கோர்ட்டில் நிர்மலாதேவியும் விடுதலை ஆவார்


V. Kanagaraj
மே 03, 2024 09:51

இவர் தன்னிடம் பெண்களை தவறாக வழி நடத்தினார் என்று தண்டிக்கப்பட்டிருக்கிறார் அதில் எந்த குறையும் இல்லை அவரிடம் ஆதாயம் அடைந்தவர்கள் இன்னும் சமூகத்தில் நடமாடுகிறார்கள் அவர்களை ஏன் காவல்துறை கண்டுகொள்ளவில்லை நீதி மன்றம் கூட இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?


Narayanan
மே 03, 2024 11:46

உண்மைதான் அன்பரே பயன் அடைய துடித்து, அடைந்தவர்கள் முதலில் தண்டிக்கப்படவேண்டும் நிர்மலாதேவிக்கு தண்டனை கொடுத்த நீதிபதி இதைப்பற்றி ஏன் சிந்திக்கவில்லை சமுதாயத்தில் எப்படிப்பட்ட பதவியில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்


vijayakrishnan D
மே 01, 2024 12:16

விரைவு நீதி மன்றம் வருஷம் வருடம edhuthu நிர்மலா தேவி குற்றவாளி என்ற பின் மேல் முறையிடு செய்தால் நிரபராதி என தீர்ப்பு வரும் வருடங்களுக்கு பின் வாழ்க நீதி அநீதி


Senthoora
மே 03, 2024 07:01

பிஜேபியில் சேர்ந்திருந்தால் மூளைச்சலவை செய்யப்பட்டு, பாவ மன்னிப்பு கொடுக்கபட்டிருக்கும் பிழைக்க தெரியல பாவம் எல்லோர் பழியையும் தன மேல் போட்டுக்கிட்டாங்க


vbs manian
மே 01, 2024 09:45

சம்பந்த பட்ட பெரும் புள்ளிகள் விவரங்கள் வெளி வருமா


Nagercoil Suresh
மே 01, 2024 06:16

ஒரு பெண் புரோக்கர் வேலை செய்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறையா? அப்படீன்னா பின் இருந்து இயக்கியவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனது தங்களுடைய இயலாமையையும் அநீதிதியும் காட்டுகிறது, இதற்கெல்லாமா வீடியோ ஆதாரம் கொடுத்து உறுதிப்படுத்த முடியும், தவறான தீர்ப்பு


ராஜா68
ஏப் 30, 2024 20:59

இதே வேகத்தில் பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்லுங்கள்


ஆரூர் ரங்
ஏப் 30, 2024 21:42

அஸ்குபுஸ்கு. அண்ணா வழி பங்காளிகள் ஒப்பந்தத்தை கெடுக்கப் பாக்குறீங்க. நடக்கவே நடக்காது. மூன்று வருசத்துல முடியாத விசாரணை இனிமேலா நகரப் போகுது?


rsudarsan lic
ஏப் 30, 2024 20:53

Enough time to write a book and win prizes Then come out and win election Who knows she may be given Education portfolio


Siva Subramaniam
ஏப் 30, 2024 20:52

What happened is amounting to rape with consent of involved female students As some one has written in these columns, this lady will appeal to SC, who will probably suspend the sentence and everything will be over Those who made use of this lady will enjoy life as usual


Jai
ஏப் 30, 2024 20:13

தண்டனை பெற்ற இந்த அம்மா உச்ச நீதிமன்றம் சென்று தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மனு கொடுத்து அதை உச்சநீதிமன்றமும் ஒத்து கொண்ட பிறகு அவர் மீண்டும் பேராசிரியராக பணியாற்றினால் எப்படி இருக்கும்? அதுதானே தற்போது அரசியல்வாதி செய்துள்ளது?


Senthoora
ஏப் 30, 2024 21:04

அதுக்கு பாஜகவில் சேரனும், உடனே பாவ மன்னிப்பு கொடுத்திருப்பங்க பிழைக்கத்தெரியாத நிர்மலா அம்மா


அப்புசாமி
ஏப் 30, 2024 18:37

இவரால் ஆதாயமடைந்த பேராசியர்கள் எல்லாம் சொக்கத் தங்கம். பாதிப்பேர் ரிடையராகி செத்தே போயிருப்பாங்க.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி