உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுவிலக்கு சட்டத் திருத்தம்: கவர்னர் ரவி ஒப்புதல்

மதுவிலக்கு சட்டத் திருத்தம்: கவர்னர் ரவி ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது பூதாகரமான பிரச்னையாக மாறிய நிலையில், மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் கொண்டுவந்தது. சட்டத் திருத்தத்தின்படி, கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பதற்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். படிப்படியாக முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.இந்த சட்ட மசோதா ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அம்மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவிற்கு தற்போது கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இச்சட்டம் அமலுக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

V RAMASWAMY
ஜூலை 14, 2024 19:44

ஓஹோ இப்படி ஒரு கருது இருக்கிறதோ, அப்படியானால், இந்துக்களை ஒழிக்க இதுவும் ஒரு திட்டமோ?


Godyes
ஜூலை 13, 2024 08:07

ஒரு பத்து பேருக்கு குடிகாரன்னு முகத்தில் பச்ச குத்தினாலே நாட்டில் பூரண மது விலக்கு ஆட்டோமேட்டிக்காக அமலாகி விடும். இப்போதெல்லாம் ஆண்களும் பெண்களும் உடம்பில் பல இடங்களில் பச்ச குத்திக்கொள்வது பேஷனாகிவிட்டது. குடியை நீக்க முகத்தில் பச்ச குத்திக்கொள்வதில் தவறவில்லை.


Godyes
ஜூலை 13, 2024 04:49

குடிகார பச்ச குத்தற சட்டம் போட்டாலே போதும்.ஒரு பய குடி பக்கமே போக மாட்டான். அண்ணாத்தைகளின் வருமானம் அம்பேல்.


Godyes
ஜூலை 13, 2024 04:36

குடிப்பவர் பிச்சக்கார அன்றாடம் காய்ச்சி பசங்க.அவனுக எப்படி பத்து லட்சம் அபராதம் கட்டுவானுக.


Godyes
ஜூலை 13, 2024 04:34

குடிப்பவர் பச்சை பார்கள்.அழர்களுக்கு பத்து லட்சம் அபராதம் போட்டால் எப்படி கட்டுவார


Godyes
ஜூலை 13, 2024 04:31

டாஸ் மாக் கடைகளின் முன்னால் காவல் துறையினர் கண்காணிப்பில் பச்சை குத்துபழவர்களை அமர்த்தி சரக்கடித்து விட்டோ அல்லது அதை வாங்கி வரும்போது வருபவர்களின் நெற்றி தவடைகளில் இவன் குடிகாரன் என பச்சை குத்தி அனுப்பவேண்டும்.பிறகு எவனும் டாஸ்மாக் கடை பக்கம் தலை வச்சு படுக்கமாட்டான்.இந்த முறை கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் அதை மொடா மொடாவா வாங்கி குடிக்கும் ஜில்லா கேடிகளுக்கும் பொறுத்தும்.


Godyes
ஜூலை 13, 2024 04:12

குடிகாரர்களின் முக தவடைகளில் நெற்றிகளில் இவன் குடிகாரன் என பச்சை குத்தி விட்டால் அதை பார்ப்பவர் அவனை காறி துப்பு வார்கள். குடிபக்கமே எவனும் போக மாட்டான்.


sankaranarayanan
ஜூலை 13, 2024 01:48

குடி குடியை கெடுக்கும் புகைபிடிப்பது ஆரோக்கியத்தை கெடுக்கும் என்று பலகை போர்டுகளை வாசலில் வைத்துவிட்டு அதன் உள்லேயே இவைகளை விற்க ஏற்பாடு செய்தால் யாரை ஏமாற்றுவது ஊரை ஏமாற்றி உலையில் போடுவதுபோலத்தானாகும்


Arachi
ஜூலை 12, 2024 23:41

எத்தனையோ இது போன்று சட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கலாம்.இபோதாவது விவரம் வந்ததற்கு சந்தோஷம்.


raja
ஜூலை 12, 2024 20:26

அசையும் சொத்து என்றால் எது அந்த ஊரைச் போட பயன் படும் பீப்பாய், பானை குழாய் போன்றவையா..


Iniyan
ஜூலை 12, 2024 23:01

சரியான கேள்வி சார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை