உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் மீது வழக்கு பதியாவிட்டால் போராட்டம்: கிருஷ்ணசாமி மிரட்டல்

சீமான் மீது வழக்கு பதியாவிட்டால் போராட்டம்: கிருஷ்ணசாமி மிரட்டல்

சென்னை: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி சென்னையில் அளித்த பேட்டி:கடந்த 15ம் தேதி, துாத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில், கள் இறக்கிய சீமான் மற்றும் அதில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சீமானை கைது செய்ய வேண்டும். இல்லையெனில், இது சமூகத்தில் போக்கிரித்தனத்தையும், பொல்லாத விஷயங்களையும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடும். தமிழ்த்தேசியம் பேசிவிட்டு, கள் தேசியத்தையும், சாராய தேசியத்தையும் உருவாக்க சீமான் முயல்கிறார். இனி தமிழகத்தில் எந்த இடத்திலாவது சீமான் கள் இறக்கினால், கள் பானைகளை உடைக்க, 100 அரிவாளோடு சிலர் தயாராக இருக்கின்றனர்.கள் இறக்குவோருக்கு பாதுகாப்பு கொடுக்க, அரிவாளை ஊருக்குள் துாக்கினால், கள் பானைகளை உடைக்க, 100 அரிவாளை ஊருக்குள் துாக்கினால் நிலை என்னவாகும். சீமான் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் அல்லது திருத்தப்படுவார். கள் இறக்கிய சீமான் மற்றும் அவருடன் பங்கேற்றவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; இல்லையென்றால், நாங்கள் அடுத்தகட்டம் நோக்கி செல்வோம். போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும். சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

swam nithi
ஜூன் 20, 2025 17:44

Doctor Tasmark better?


Vijay D Ratnam
ஜூன் 20, 2025 13:45

ஹலோ டாக்டர் சாக்கடையில் கல் எறியாதீர்கள் .


Manaimaran
ஜூன் 20, 2025 10:08

உனக்கு ஆரம்பம் .இனிமேல்


veeramani
ஜூன் 20, 2025 09:13

கிருஷ்ணசாமி அவர்கலே சீமான் கொட்டுவந்தது கல் தானா அல்லது பதநீரா உறுதி இல்லாத நிலையில் எப்படி காவலர்கள் வழக்கு தொடுக்க இயலும். நீங்கள் பேசுவதுதான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் உள்ளது


மூர்க்கன்
ஜூன் 20, 2025 11:40

முடிந்தால் ரெண்டு பேரையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கலாம் நல்ல பொழுது போக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை