உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெண்டரை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம்

டெண்டரை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம வளத்தை சுரண்டும் வணிக நோக்கில், இந்தாண்டு பிப்ரவரியிலேயே வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு டெண்டர் விட்டுள்ளது. அனைத்து விவசாயிகள் சங்கத்தினரும், இத்திட்டத்திற்கு எதிராக போராடி வருகிறோம். இந்நிலையில், தமிழக சட்டசபையில் இத்திட்டத்தை கைவிடுவதோடு, ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ஏற்கத்தக்கது.அரிட்டாப்பட்டி, அதைச் சுற்றியுள்ள 48 கிராமங்களை உள்ளடக்கி, பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்கம் மற்றும் வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக கொள்கை முடிவெடுத்து அரசிதழில் வெளியிட வேண்டும். அதே நேரத்தில், மத்திய அரசின் டெண்டர் அறிவிப்பில் இருந்து அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கும் வரை, விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 10, 2024 07:50

இதே வேதாந்தா நிறுவனத்தின் ஆலையான ஸ்டெர்லைட் காப்பரை போராட்டம் நடத்தி மூடிவிட்டு வேலைவாய்ப்பை இழந்து நாடு தாமிரம் பற்றாக்குறைக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது....இப்பொழுது டங்ஸ்டன்னில் ஆரம்பித்து இருக்கிறார்கள்....!!!


சமீபத்திய செய்தி