உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெங்கு, புளூ காய்ச்சல் அதிகரிக்கலாம் பொது சுகாதார துறை எச்சரிக்கை

டெங்கு, புளூ காய்ச்சல் அதிகரிக்கலாம் பொது சுகாதார துறை எச்சரிக்கை

சென்னை: 'வடகிழக்கு பருவ காலத்தில் டெங்கு, உண்ணி, புளூ போன்ற காய்ச்சல் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், எச்சரிக்கை அவசியம்' என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம், வடகிழக்கு பருவ மழையில் அதிக கன மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. இக்காலங்களில் கடுமையான வயிற்றுப்போக்கு நோய்கள், புளூ, டெங்கு, உண்ணி போன்ற காய்ச்சல் பாதிப்புகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக பரவ வாய்ப்புகள் உள்ளன. எனவே, பாதிப்புகளை தடுக்க, அனைத்து மாவட்ட ங்களும் தயார் நிலையில் இருப்பது அவசியம். அனைத்து அரசு மருத்துவமனைகளில், போதிய அளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பது அவசியம் தரைதளத்தில் இருக்கும் நோயாளிகளை, முதல் தளத்திற்கு மாற்ற வேண்டும். தேவைப் படும்போது மட்டுமே புதிய நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் 'ஜெனரேட்டர்'கள், ஆக்சிஜன் வினியோக அமைப்புகளை ஆய்வு செய்து, அதன் இயக்கத்தை உறுதி செய்ய வேண்டும். குறைந்தது 72 மணி நேர தொடர்ச்சியான செயல்பாட்டுக்கு எரிபொருள் இருப்பை உறுதி செய்வது அவசியம் மருத்துவமனை வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருக்க, வடிகால்களை சரிபார்த்து சுத்தம் செய்ய வேண்டும் மின்சாரம் தடைபட்டால், போதுமான குடிநீர் சேமிப்பு, அவசரகால விளக்குகள், ஒயர்லெஸ் அல்லது மொபைல் போன் தொடர்பு வசதிகளை, 'பவர் பேங்க்'களுடன் உறுதி செய்வது கட்டாயம் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக நோயாளிகள் மற்றும் பிறந்த குழந்தைகளை இடமாற்றம் செய்வதற்கான வசதி, அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்க வேண்டும் பொது வினியோக குடிநீரில் குளோரின் கலந்திருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும் தேவைக்கு ஏற்ப மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்கான படுக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !