உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மாநகராட்சி பூங்காவிற்குள் வளர்ப்பு நாய்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியை, ‛ராட்வைலர்' ரக நாய்கள் கடித்துக் குதறியது. இதில் ஆபத்தான நிலையில் அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மாநகராட்சி பூங்காக்களுக்குள் அனுமதிக்கப்படும் நாய்கள் தொடர்பான விதிமுறைகளை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி வைத்து உள்ளது.இதன்படி,* கழுத்தில் சங்கிலி போட்டும், வாயை மூடியும் அழைத்து வரப்பட வேண்டும்.* உரிமம் பெற்ற, தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே அனுமதி* ஒரு நபர், ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே அழைத்து வர வேண்டும்* பூங்காவிற்குள் குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை* வழிகாட்டுதல்கள் அனைத்தையும் பூங்கா காவலர்கள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

முருகன்
மே 07, 2024 20:48

ஓவ்வொரு விஷயத்திலும் தவறு நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதில் என்ன பயன்? இதற்கு என இருக்கும் அதிகாரிகள் வேலை என்ன ? தேவை கடுமையான நடவடிக்கை


M Ramachandran
மே 07, 2024 19:51

இதெல்லாம் ஏற்காட்டு சுரைய் காய் கடிபட்டது ஒரு சாதாரண வாட்ச்மேனின் குழந்தை சிறிது நாட்கள்ல நம் ஜிஞ்சா ஊடகங்களால் செய்தி மறைக்க படும்


Sampath
மே 07, 2024 18:03

நாகரிக முன்னேற்றம் ஒரு காலத்தில் வீட்டிற்கு வெளியே நாய்கள் காவல் காக்கும் விளைச்சலை பார்க்க விவசாயி வயல்களுக்கு சென்றால் அதுவும் அவனை பின்தொடரும் வீட்டுக்கு உள்ளே வர நாய்களுக்கு அனுமதி இல்லை புதியவர் வந்தால் குரைக்கும் ஆனால் இன்றைய நவீன நாகரிகத்தில் நாய்கள் கட்டில்களின் படுத்துக் கொள்வதும் வீட்டு உரிமையாளர் தரையில் படுத்து கொள்வதும், நாய்களை வாக்கிங் அழைத்துச் செல்வதும், நாய்களை நாய் என்று சொன்னால் அதன் உரிமையாளர் சண்டைக்கு செல்வதும், அது கழித்தால் பக்கத்திலேயே நின்று கொண்டு அதன் நாற்றத்தை முகர்வதும், சிறுநீர் கழிக்கும் வரை பக்கத்திலேயே நின்று கொண்டிருப்பதும் இன்றைய நவீன நாகரிகம் வாழ்க நாகரீகம்


gopi
மே 08, 2024 08:05

கொஞ்ச பேர் லிப் கிஸ் எல்லாம் கொடுக்கும் அளவுக்கு போயிட்டானுங்க... பேமானிங்க


chandramohan
மே 07, 2024 17:44

சென்னை தவிர பிற நகரங்களும் தமிழ் நாட்டின் கட்டுக்குள் தான் இருக்கிறது வரும் முன் காப்போம் திட்டத்தில் உரிய சிறந்த உடனடி நடவடிக்கை தேவை சம்பவங்களுக்கு பொருத்திருக்க வேண்டாமே


ponssasi
மே 07, 2024 16:29

சாலைகளில் பிடித்து நடக்கவே கூடாது என அறிவிக்கவேண்டும் அது சிறுநீர் கழிக்க பத்து வீடு தள்ளி இருக்கும் ஒரு கார், கழிக்க யாரேனும் வீடு வாசலில் மணலோ ஜல்லி குவித்திருந்தால் அங்கு அசிங்கம் செய்துவிட்டு திரும்பிவிடும், ஏன் இவர்கள் வீடு வாகனத்தில் சிறுநீர் கழிக்க அனுமதிக்கக்கூடாது சாலையோர நடைபாதை, முழுக்க இந்த அசிங்கம் உள்ளது மாநகராட்சி இதை கவனத்தில் கொண்டு அதையெல்லாம் தடை செய்ய வேண்டும்


M Ramachandran
மே 07, 2024 19:59

அயல் நாடுகளில் நாய் விட்டை போட்டால் உரிமையாளர் உடனே அதையெடுத்து அதர் காண குச்சி மூலம் பிளாஸ்டிக் பயில் கலெக்ட் பண்ணி பார்க்கில் ஒரு தொட்டி அமைக்க பட்டிருக்கும் அதில் போட வேண்டும் இல்லையென்றால் யாரவது செல் போனில் போட்டோ எடுத்து நகராட்சிக்கு அனுப்பினால் வீடு தேடி அபராத நோட்டிசு வரும் பவுண்டு வரை அபராதம்


Mohan
மே 07, 2024 16:24

அட கண்ராவியே அது சரி, தெருநாய் சனியன்கள் கடித்தால் யார்மீது ஆக் ஷன் எடுப்பீங்க? தெருநாய் சனியன்களின் தொந்தரவுகள் தாங்க முடியல மும்பையில் சில மாதங்கள் முன்பு காலை நடைபயற்சிக்கு சென்ற பிராண்டட் டீ தயா ரிக்கும் கம்பெனியின்இளம் வயது சிஇஓவை தெருநாய்கள் கடித்து சாக அடித்து விட்டனஏன் இன்னும் மெளனம்? தெரு நாய்களாக இருந்தாலும் யாராவது லைசன்ஸ் பெற்று வளர்க்க வேண்டும் இல்லாவிட்டால் அவை அழிக்கப் பட வேண்டும் இதில் ஜீவ காருண்யம் பார்க்க வேண்டாம் ஒரு நாளில் லடசக்கணக்கான கோழிகள் மீன்கள்,ஆடுகள்,மாடுகள் எல்லாம் மனிதன் சாப்பிட கொல்லப்படுகின்றன மனிதன் உயிரைக் காக்க ஒரு ஆயிரம் நாய்கள் கொல்லப்பட்டால் தவறு என்ன?? உச்சநீதிமன்ற கனவான்களே பதில் சொல்லுஙக


Raa
மே 07, 2024 15:39

கண் கெட்டபின் சூரிய நமஸ்க்காரம் பண்ண கிளம்பும் மாநகராட்சி ஏன் இது வரை இதுமாதிரியான கட்டுப்பாடுகள் இல்லை அல்லது நடைமுறைப்படுத்தப்படவில்லை? இதுவரை நாய் யாரையுமே கடிக்கவில்லையா என்ன?


ஆரூர் ரங்
மே 07, 2024 14:56

சென்னையின் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளில் நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்பவர்கள் அவர்களது நாய் கக்கா போனால் அதனை அவர்களே உடனடியாக அகற்ற வேண்டும் என்ற விதி வைத்துள்ளார்கள். இதற்கு பல மேல்தட்டு GATED COMMUNITY குடியிருப்புகளில் அபராதம் கூட விதிக்கிறார்கள். அன்னிய நாயை வளர்ப்பதே தேவையற்ற வேலை.


somasundaram alagiasundaram
மே 07, 2024 14:26

எல்லாம் கொஞ்ச நாள் ....


Karthik
மே 07, 2024 14:21

முதலில் தடை செய்யப்பட்ட நாய்களை பிடித்து corporation கென்னெலில் சாகும் வரை வளர்க்க வேண்டும் யாரும் புதிதாக இந்த வகை நாய்களை வாங்கவோ விற்கவோ கூடாது நாய் வளர்க்கிறேன் என்ற பேரில் சென்னையில் நிறைய பேர் இனப்பெருக்கம் செய்து வியாபாரம் செய்கின்றனர் அவர்களை ஜெயிலில் போட வேண்டும்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ