உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுச்சேரியில் பயங்கரம்: மூன்று வாலிபர்கள் வெட்டி படுகொலை

புதுச்சேரியில் பயங்கரம்: மூன்று வாலிபர்கள் வெட்டி படுகொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ks0hbkqd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் பழமையான வீட்டிற்கு அருகே ரித்திக், தேவா, ஆதி ஆகிய 3 பேர் இன்று (பிப்.,14) வெட்டு காயங்களுடன் கிடந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதில் பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரித்திக் , திடீர் நகரைச் சேர்ந்த தேவா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதே பகுதியை சேர்ந்த சத்தியா என்பவருக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.இது குறித்து டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இடத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
பிப் 14, 2025 21:53

இதற்குக் காரணம் விளங்காத விடியல் ஆட்சி தான்! ஐயையோ பழக்க தோஷத்தில் சொல்லி விட்டேன், அங்கு நடப்பது பாஜக கூட்டணி ஆட்சி அல்லவா?


jayvee
பிப் 14, 2025 18:16

பிஜேபி மற்றும் ரெங்கசாமி இருவரும் ஒருவரை ஒருவர் நெருக்கிக்கொண்டிருக்கும் ஆட்சி இங்கு நடக்கிறது


என்றும் இந்தியன்
பிப் 14, 2025 16:22

ரவுடியை ரவுடி கொன்றான் முன்பகையால் அவர்கள் எங்கே தன்னை மிஞ்சி விடுவார்களோ என்று - இது தான் உண்மையான செய்தி


user name
பிப் 14, 2025 14:28

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல சங்கிகளுக்கு உத்தரபிரதேசத்தில் சம்பவம் நடந்தாலும் தி மு க தான் காரணம் , இதுக்கு என்னால் நல்ல உதாரணம் கூறமுடியம் ஆனால் பிரசுரிக்க முடியாது


Tiruchanur
பிப் 14, 2025 16:26

the vidiyal ஆட்சி சொம்பே


Natchimuthu Chithiraisamy
பிப் 14, 2025 14:08

பிரபல ரவுடி மகனே கொலையா? ரவுடிகளுக்கு எதிர்காலம் இல்லை போல் தெரிகிறது. ரவுடி அரசியல் வாதிகளும் மக்களால் கொல்ல படுவார்களா? உழைக்காமல் உண்டு வாழ வழி இல்லையா. அரசியல் வாதிகள் மக்கள் வரி பணத்தை எடுக்க வருங்காலம் அனுமதிக்காது போல் தெரிகிறது


sankaranarayanan
பிப் 14, 2025 13:26

பிரபல ரவுடி சகாப்தம் ஒழிந்தது முற்றிற்று இனி புதிதாக ரவுடிகள் அரங்கேறினால்தான் தெரியும் என்னனென்ன பெயர்களில் யார் யார் உலவி வருவார்கள் என்று அது வரையில் நாடே சற்றே அமைதியாக இருக்கும்


Pandi Muni
பிப் 14, 2025 13:08

விடியா அரசின் அலங்கோலம்


N.Purushothaman
பிப் 14, 2025 13:48

நடந்தது பாண்டிச்சேரியில் ...அதனால் விடியா அரசிற்கு இதில் சம்மந்தம் இல்லை ....


Ramesh Sargam
பிப் 14, 2025 12:49

தமிழக கலாச்சாரம் அங்கேயும் பரவுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை