மேலும் செய்திகள்
டெல்டா நெல் கொள்முதல் ; 4 லட்சம் டன் குறைந்தது
04-Sep-2024
சென்னை:தமிழகத்தில் இதுவரை, 2 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இந்திய உணவு கழகம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல் அரிசி யாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இம்மாதம், 1ம் தேதி நெல் கொள்முதல் சீசன் துவங்கியது. வாணிப கழகம் சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு, விவ சாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், நேற்று முன்தினம், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு சீசனில், 23ம் தேதி வரை, 752 நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, 2 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகளிடம் கனிவுடன் நடக்குமாறும், கொள்முதல் செய்யப்படும் நெல்லை மழையில் நனையாதபடி பாதுகாப்பாக உடனுக்குடன் கிடங்குகளுக்கு அனுப்புமாறும், செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார். தேவையான இடங்களில் விரைவாக கொள்முதல் நிலையம் திறக்குமாறும் தெரிவித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.
04-Sep-2024