உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு

பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்; முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 23ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை அரசு செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ. 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி மற்றும் ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன் ஆகியோர் மீது, கடந்த 2012ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் இதுவரையில் 54 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று நடந்த விசாரணையில், வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அப்போதைய மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யான ஓய்வுபெற்ற விஜயராகவன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நிக்கோல்தாம்சன்
செப் 10, 2025 21:07

ஓசிக்கு பிறந்த கட்சி


Ram Prasath
செப் 10, 2025 16:22

ஆமா, சாருக்கு இப்ப தான் வயசு இருபது, இன்னும் இந்த கேஸ் 10 வருஷம் ஓட்டலாம். பண்ணது கிரிமினல் குற்றம், இதை விசாரிக்க எதுக்கு காலத்தை கடத்தணும்? எப்படி நீதிமன்றத்தின் மேல மக்களுக்கு நம்பிக்கை வரும்? நீதிஅரசர்கள் இருக்குற, இருந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லாரும் உத்தம சிகாமணிகள்னு சொல்ல திராணி இருக்கா? அதுவும் இல்லை, பின்ன எதுக்கு நீதிமன்றம்?


sugumar s
செப் 10, 2025 13:53

in india the court is very very slow. once there was review for poottadha pootukal movie of mahendran. that time, slow defined in 3 days. slow, dead slow and poottadha pootukal. now court judgements are as follows, slow, dead slow, poottadha pootakal, court judgements. they will overtake even poottadha pootukal


Raghavan
செப் 10, 2025 12:48

சைவ வைணவ முறையெல்லாம் முடிந்து எப்போது அவரால் முடியாமல்போகிறதோ அப்போது அவரே நீதிபதியிடம் விஜாரணையை தொடங்கலாம் என்று சொல்லும்போது வழக்கு விஜாரணைக்கு வரும். பிறகு நீதிபதி போதிய அரசாங்க தரப்பு ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு தள்ளுபடி என்பார். இதுதான் நாட்டில் நடந்துகொண்டுஇருக்கிறது.


shyamnats
செப் 10, 2025 10:43

13 வருடங்கள் என்பது குறைந்த குறைந்த காலமா என்ன ? இன்னும் எத்தனை வருடங்கள் ஒத்தி வைப்பு தொடரும் . வயது முதிர்ந்து குற்றவாளிகள் மறையும வரை விசாரணைகள தேவையா


Raghavan
செப் 10, 2025 12:43

இதெல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம். வேற வேலை இல்லை இந்த நீதிமன்றங்களுக்கு. எல்லா வழக்குகளுக்கும் ஒரு கால நிர்ணயம் வேண்டும். அது சாத்தியப்படாதவரையில் எல்லா வழக்குகளும் இழுத்தடித்துக்கொண்டு தான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை