உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலாண்டு விடுமுறை அக்.,6 வரை நீட்டிப்பு: ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்றது அரசு

காலாண்டு விடுமுறை அக்.,6 வரை நீட்டிப்பு: ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்றது அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களை நீட்டிக்க கோரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்து வகுப்பினருக்கும் தேர்வுகள் வரும் 27ம் தேதியுடன் நிறைவடைகிறது. செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்படும்; 5 நாட்களிலும் எவ்வித சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=utlzw6wv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆசிரியர்கள் விடுமுறை நாட்கள் போதுமானதாக இல்லை, விடைத்தாள் திருத்தம், மதிப்பீடு, அலுவலக வேலைகள் என உள்ளதால் விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில், இன்று(செப்.,25), தமிழகத்தில் காலாண்டு தேர்வு லீவு அக்டோபர் 6ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது பள்ளி திறப்பு 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
செப் 25, 2024 17:55

நாங்க மட்டும்தான் வேலை செய்யாம வெட்டியா இருக்கணும்னு சட்டம் ஒண்ணுமில்லே...


Nallavan
செப் 25, 2024 15:28

பண்டிகை காலம் 104 நாட்கள் சனி ஞாயிறு 104 நாட்கள் மழைகள் விடுமுறை 30 காலாண்டு, அரையாண்டு , இறுதியாண்டு 60நாட்கள் - 365 = பள்ளி நாட்கள் 67 இதில் விஜயதசமிக்கு


ponssasi
செப் 25, 2024 14:36

அய்யய்யோ இப்படி நடக்கும்னு தெரிச்சிருந்தா இன்னும் ஒருவாரம் சேர்த்து கேட்டிருக்கலாமோ


Krishna Gurumoorthy
செப் 25, 2024 12:30

விஜய தசாமிக்கு லீவ் விடக்கூடாது இதுதான் திராவிட சதி


Narayanan Muthu
செப் 25, 2024 18:40

அக்டோபர் 11 மற்றும் 12 கூடவே 13 ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதை அரசாங்க விடுமுறை லிஸ்டில் பார்த்தாவது தெரிந்து கொள்ளவும். மகா புத்திசாலிகளுக்கு மூளை மூலையில்தான் இருக்கும் போல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை