உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்

எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்ததற்காக மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மிரட்டியதாக, காங்கிரஸ் எம்பி ராகுல் புகார் கூறியதற்கு அவரது மகன் ரோஹன் ஜெட்லி பதிலடி கொடுத்துள்ளார்.டில்லியல் நடந்த 2025ம் ஆண்டு வருடாந்திர சட்ட மாநாட்டில் ராகுல் பேசுகையில், 'https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pqfg019f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்தது. தற்போது ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களை நான் எதிர்த்த போது, அருண் ஜெட்லி என்னை மிரட்ட என்னிடம் அனுப்பப்பட்டார் என்பது எனக்கு நினைவிருக்கிறது.

நடவடிக்கை

நீங்கள் அரசாங்கத்தை எதிர்த்து, விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தால், நாங்கள் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரைப் பார்த்து, நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்' என தெரிவித்தார்.

ராகுலுக்கு பதிலடி

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீதான ராகுலின் குற்றச்சாட்டினை அவரது மகன் ரோஹன் ஜெட்லி மறுத்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எனது மறைந்த தந்தை அருண் ஜெட்லி வேளாண் சட்டங்கள் தொடர்பாக தன்னை மிரட்டியதாக ராகுல் இப்போது கூறுகிறார். அவருக்கு நினைவூட்டுகிறேன், என் தந்தை 2019ல் காலமானார். வேளாண் சட்டங்கள் 2020ல் அறிமுகப்படுத்தப்பட்டன. மிக முக்கியமாக, எதிர்க்கும் பார்வையில் யாரையும் அச்சுறுத்துவது என்பது எனது தந்தை இயல்பு அல்ல. அவர் உறுதியான ஜனநாயகவாதி, ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் எப்போதும் நம்பிக்கையுடன் இருந்தார்.

வார்த்தைகளில்....!

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்குமானால் அவர் விவாதத்துக்கு அழைத்து அனைவருடனும் பேசி ஏற்றுக்கொள்ளும் படியான தீர்வை உருவாக்கி இருப்பார். இத்தனை காலமாக அது தான் அவரது பெருமையாக இருந்து வருகிறது. உயிருடன் இல்லாதவர்கள் பற்றி பேசும் போது, வார்த்தைகளில் கவனத்துடன் இருந்தால் நான் ராகுலை பாராட்டுவேன்.அவர் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் கடைசி நாட்களை பற்றி பேசியது போலவே எனது தந்தையை பற்றியும் ஏதோ பேச முயற்சிக்கிறார். இதேபோலவே அதுவும் மோசமான கருத்தாக இருந்தது. இவ்வாறு ஜெட்லி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Santhakumar Srinivasalu
ஆக 03, 2025 11:07

இறந்த மனிதன் மீது பொய் பிரசாரம் செய்கிறார் இந்த உத்தம சீலர்!


M Ramachandran
ஆக 03, 2025 01:09

ராகுல் மன நல மருத்துவரிடம் போக வேண்டிய ஆள். தவறி பாராளுமன்றத்திற்குள் நுழைந்து நேரத்தையும் அதன் மாண்பையும் கெடுக்கிறார்


panneer selvam
ஆக 03, 2025 00:22

Rahul ji , it is the right time , you have to change your speech writer or you should not speak your mind . Look at the episode of quoting Arun Jaitley . Now you look stupid in front of all


Bhakt
ஆக 02, 2025 23:19

யாருக்கும் தெரியாமல் அந்தமான் சாவர்க்கர் துன்பம் அனுபவித்த செல்லுலாறில் 10 வருடம் போட்டால் தான் பைத்தியம் தெளியும்.


JaiRam
ஆக 02, 2025 23:02

இனி கொலை வழக்குகளில் ஆதாரம் கிடைக்கவில்லை என்றால் ராகுல் வின்ஸியி வைத்து செத்தவர்களிடம் பேசி ஆதாரத்தை திரட்டலாம் ஓ பி எஸ் ராகுலை வைத்து அம்மாவிடம் பேசி கடசியை கைப்பற்றலாம்


M S RAGHUNATHAN
ஆக 02, 2025 20:34

இவரெல்லாம் ஒரு மக்கள் பிரதிநிதியாம் . வெட்கக்கேடு . சரியான mental.


M S RAGHUNATHAN
ஆக 02, 2025 20:02

இந்த போலி காந்தி வாஜ்பாய் பிரதமர் ஆக இருந்தபோது அமெரிக்காவில் ஒரு ஏர்போர்ட்டில் போதைப் பொருள் மற்றும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டாலர் வைத்து இருந்ததால் ஏர்போர்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டார்.அப்போது பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு அவர் விடுதலை பெற ஏற்பாடுகள் செய்தார். புது பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுத்ததாக அப்போது செய்தி தாளில் வந்தது.


Rathna
ஆக 02, 2025 18:41

எதோ கனவு கண்டு இருக்கிறாaf போல 2019-ல் இறந்து போன நபர் 2020 ல் மிரட்டியது என்றால், மிக பெரிய வைத்திய பிரச்சனையாக இருக்கும். கேரளா மந்திரவாதியை வைத்து வைத்தியம் செய்ய வேண்டும்.


Sundaran
ஆக 02, 2025 18:22

இத்தாலி கோமாளியை திருத்தவே முடியாது போலும். இந்தியா நாசமாக போனதற்கு இந்த கோமாளியின் குடும்பமே காரணம்.


பேசும் தமிழன்
ஆக 02, 2025 17:41

பப்பு.... பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.... இத்தாலி மாஃபியா கும்பல் என்றாலே திருட்டு வேலை தான் நியாபகம் வருது !!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை