உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40 பேரை பலி கொண்ட கரூர் கூட்ட நெரிசல்: முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய ராகுல்

40 பேரை பலி கொண்ட கரூர் கூட்ட நெரிசல்: முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய ராகுல்

புதுடில்லி: கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன், காங்கிரஸ் எம்பி ராகுல் பேசி உள்ளார். தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் பலியான சோகம் இன்னமும் அகலவில்லை. நிவாரணம்,மருத்துவ உதவிகள், காவல்துறை நடவடிக்கை மற்றும் விளக்கங்கள் என அரசு தரப்பு இயங்கிக் கொண்டிருந்தாலும், தேசிய அளவில் இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.கரூர் சம்பவம் குறித்து, முதல்வர் ஸ்டாலினிடம், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், எம்பியுமான ராகுல் கேட்டுள்ளார். இந்த விவரத்தை தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ராகுலுக்கு நன்றி கூறி உள்ளார்.அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்று வருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் ராகுலுக்கு நன்றி.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை