உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் நேரு மற்றும் குடும்பத்தினர் இடங்களில் ரெய்டு :

அமைச்சர் நேரு மற்றும் குடும்பத்தினர் இடங்களில் ரெய்டு :

சென்னை : சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் மகன் வீடு, அலுவலகம் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.என்.நேரு. இவர், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க., அமைச்சரவையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக உள்ளார். இவரது மகன் அருண், பெரம்பலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி.,யாக உள்ளார். நேருவுக்கு மூன்று சகோதரர்கள்.அவர்களில் ஒரு தம்பியான, திருச்சி தில்லை நகரில் வசித்து வந்த ராமஜெயம், 2012ல் மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொல்லப்பட்டார். தற்போது அந்த வீட்டில், அவரது மகன் மற்றும் மனைவி வசிக்கின்றனர்.

கட்டுமான தொழில்

நேருவின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன். சென்னை ஆர்.ஏ.புரம், கிருஷ்ணாபுரி முதல் தெருவில் வசிக்கிறார்; மணிவண்ணன் என்ற சகோதரர் கோவையில் உள்ளார். நேருவின் சகோதரி உமா மகேஸ்வரி, பெரம்பலுாரில் வசிக்கிறார். நேருவின் சகோதரர்கள் மற்றும் அவரது மகன் பங்குதாரர்களாக உள்ள டி.வி.எச்., குழுமம், கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியிலும் நேருவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளாக, நேருவின் மகன் அருண், சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் உள்ளனர். கடந்த 2018ல் அமைச்சர் நேருவுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய முக்கிய ஆவணங்கள் வாயிலாக கிடைத்த தகவல்களை, வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத் துறையினருக்கு தெரியப்படுத்தினர். இதையடுத்து, நேரு மற்றும் அவரது உறவினர்களின் வங்கி கணக்குகளை, அமலாக்கத் துறையினர் கண்காணிக்கத் துவங்கினர். ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் வங்கி கணக்கில் பெரும் தொகை சமீபத்தில் வரவு வைக்கப்பட்டது. இதுவும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரித்தபோது, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் வழியே அந்த பணம் வந்தது தெரியவந்தது.அதனால், சென்னை, திருச்சி, பெரம்பலுார் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், நேரு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான, 15க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 6:00 மணி முதல் சோதனை நடத்தினர். மொத்தம், 10 மணி நேரம் சோதனை நடந்தது.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அருணுக்கு சொந்தமான அரிசி ஆலை தொடர்பான நிறுவனம்; சென்னை ஆர்.ஏ.புரம், கிருஷ்ணாபுரி முதல் தெருவில் உள்ள ரவிச்சந்திரன் வீடு; மயிலாப்பூர் சி.ஐ.டி., காலனி அருகேயுள்ள, டி.வி.எச்., குழுமத்தின் முக்கிய நிர்வாகி பிரகாஷ் வீடு.

சகோதரி வீடு

அடையாறு, காந்தி நகர் நான்காவது குறுக்கு தெருவில், வைத்தியநாதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், டி.வி.எச்., கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ் வீடு; சாஸ்திரி நகரில் உள்ள நேருவின் நெருங்கிய உறவினர்கள் வீடு போன்றவற்றிலும் சோதனை நடந்தது. அடையாறு எல்.பி., சாலையில், டி.வி.எச்., அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரவிச்சந்திரனின் நெருங்கிய உறவினர்களான அறிவுநிதி, பிரேமலதா ஆகியோர் வீடுகளிலும், பல்வேறு இடங்களில் உள்ள டி.வி.எச்., கட்டுமான நிறுவன அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. திருச்சி தில்லை நகரில் நேரு மற்றும் அருண் ஆகியோர் கூட்டாக வசித்து வரும் வீடு, ராமஜெயம் வீடு, கோவை சிங்காநல்லுார் உப்பிலிபாளையம் பகுதியில் மணிவண்ணன் வீடு, பெரம்பலுாரில் உள்ள உமா மகேஸ்வரி வீடு போன்றவற்றிலும், மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சோதனை குறித்த தகவல் கிடைத்ததும், நேரு வீட்டின் முன் தி.மு.க.,வினர் குவிந்தனர். சோதனையில் பல்வேறு ஆவணங்களை, அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்கூட்டியே கசிந்த சோதனை தகவல்

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த இருப்பது குறித்து, டில்லியில் இருந்து நேரு குடும்பத்தினருக்கு, இரண்டு நாட்களுக்கு முன்னரே தகவல் கசிந்ததாக கூறப்படுகிறது. எனவே, சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Dr.C.S.Rangarajan
ஏப் 08, 2025 23:54

வெள்ளையேனே வெளியேறு, வெள்ளையன் கொள்ளை அடித்ததை கண்டித்தது உண்மையே. இன்று வெள்ளையன் இருந்திருந்தால், அவனையும் மிஞ்சி வெட்கி தலை குனிய வைப்போர் வையத்தில் உள்ளதை உணர்ந்து இப்போது சொல்லாமல் கொள்ளாமல் ஓடியிருப்பானா இல்லையா? அவ்வையத்திலுள்ளோர் கை சுத்தமில்லாதுபோனாலும் கை பக்குவம் எப்படி?


C G MAGESH
ஏப் 08, 2025 16:02

இவர் இன்று இரவு டெல்லி போவாரா


SP
ஏப் 08, 2025 14:47

திமுக அமைச்சர்களில் ஒரு யோக்கியன் ஒரே ஒரு யோக்கியன் இருந்தால் சொல்லுங்கள்


ramesh
ஏப் 08, 2025 18:02

முதலில் யோக்கியர்கள் என்று சொல்லும் நீங்கள் உங்கள் கட்சியில் இருந்து ஒரு யோக்கியணையாவது காட்டுங்கள் . பிறகு யோக்கியர்களை பற்றி பேசுங்கள் . நல்லகண்ணு போன்ற ஒருசிலர் தவிர யாரும் யோக்கியன் கிடையாது


ramesh
ஏப் 08, 2025 18:02

முதலில் யோக்கியர்கள் என்று சொல்லும் நீங்கள் உங்கள் கட்சியில் இருந்து ஒரு யோக்கியணையாவது காட்டுங்கள் . பிறகு யோக்கியர்களை பற்றி பேசுங்கள் . நல்லகண்ணு போன்ற ஒருசிலர் தவிர யாரும் யோக்கியன் கிடையாது


M Ramachandran
ஏப் 08, 2025 13:03

தேர்தலுக்கு முன்பு பண பட்டுவாடாவை தவிர்க்க இன்னும் மூலை முடுக்கெல்லாம் ரைடு நடக்கும். இதனால் பொது மக்களுக்கு எனதும் தடையில்லை. பதுக்கல் பணம் நம் பணம் என்ற நிம்மதி கிடைக்கும். என்ன திருட்டு நடப்பது இங்கே நம் பணம் தமிழ்நாடு அரசு கஜானாவிற்கு போகாமல் போக போவது மத்திய ரிசர்வு வங்கிக்கு. நம்ம பணத்தை இந்த கும்பல் கஜானாவிற்கு போகாமல் தங்கள் சொந்த குடும்பத்திற்கு மடைமாற்றுகிறார்கள். இந்த மத்திய அமலாக்க பிரிவும் ஏஆர் மெயின் இடத்தில் கை வைக்க பயப்படுகிறது. நீதி மன்றங்களும் தீர்ப்புகளும் தற்பொழுது நம்பக தன்மையை இழக்கும் படி செய்கிறது. அது காரணமாக பெரிய கொழுத்த கேழுத்தி மீனையையும் அதன் குட்டியையும் பிடிக்க வலை வீசாமல் விட்டு வைத்திருக்கு.


xyzabc
ஏப் 08, 2025 12:44

தமிழா, எதற்கு இந்த கதறல்? பிரியாணி கிடைக்கலையா?


R.PERUMALRAJA
ஏப் 08, 2025 11:49

என்றுமே முன்னாள் செல்பவர் சமிக்கை கொடுப்பார், பின் வருபவர் தொடருவார், டெல்லிக்கு முதலில் சென்றவர் செந்தில்பாலாஜி, இவர்தான் தான் தப்பிப்பதற்காக நேருவை போட்டு கொடுத்திருப்பார் போல தெரிகிறது


R.PERUMALRAJA
ஏப் 08, 2025 11:47

RAID நடத்திவிட்டார்கள் அல்லவா, அப்புறம் என்ன செந்தில்பாலாஜி போல இவறும் இந்நேரம் indigo flight இல் டில்லி செல்ல ticket புக் செய்திருப்பார். தி மு க வின் மூத்த தலைவர் என்பதனால் ...


R.PERUMALRAJA
ஏப் 08, 2025 11:42

"RAID" என்னும் செய்தி மட்டும் தான் வெளிவரும், எவ்வளவு எடுத்தார்கள், எதை எடுத்தார்கள், எத்தனை கோடி கொள்ளை அடிக்கப்பட்டது, வழக்கு எப்பொழுது, யார் மீது வழக்கு, என்று வழக்கு விசாரணை என்று மக்களுக்கு ஏதுவும் தெரியப்படுத்த மாட்டார்கள். தனக்கு தேவை என்றால் "RAID" இல்லை என்றால் தடவி கொடுப்பார்கள். தி மு க, எத்தனை RAID நடத்தினாலும் 1000 யானைகளை ஒரே நொடிப்பொழுதில் முழுங்கி ஏப்பம் விடுவதுபோல RAID நடத்திவரை, நடத்த சொன்னவரை, நீதிமன்றத்தையும் ஏப்பம் விடுவார்கள்.


xyzabc
ஏப் 08, 2025 11:29

செ பாலாஜி, பொன்முடி, ஜகத், வேலு, துரை முருகன் பயன், இப்போ முதலை நேரு .. இப்படி லிஸ்ட் வளர்கிறது. அறிவாலயத்தில் திருடர்கள் ஜாக்கிரதை என்று ஒரு போர்டு மாட்டுங்கள்.


Thetamilan
ஏப் 08, 2025 10:29

அம்பானியும் அதானியும் மோடியும் சாவும் அவர்களின் குடும்பத்தினரும் சரியாக வருமானவரி தாக்கல் செய்துவிட்டார்களா?. வருமானவரி அதிகாரிகள் அதையெல்லாம் கண்டுபிடித்தார்களா? இல்லாமல் அவர்களின் பின்னால் இருப்பது ஏன் ? அவர்களுக்கு கொத்தடிமை வேலைசெய்வது ஏன்? இப்படித்தான் அரசியல் சட்டம் கூறுகிறதா?


முக்கிய வீடியோ