உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்தடுத்து 2 விபத்துகள் ரயில்வே வாரியம் ஆலோசனை

அடுத்தடுத்து 2 விபத்துகள் ரயில்வே வாரியம் ஆலோசனை

சென்னை:தெற்கு ரயில்வேயில் அடுத்தடுத்து நடந்த இரு விபத்துகள் குறித்து, ரயில்வே வாரிய தலைவர் சதீஷ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கடலுார் மாவட்டம், ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் கடந்த 8ம் தேதி காலை 7:45 மணிக்கு, பள்ளி வாகனம் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை பயணியர் ரயில், மோதியது. இதில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, 13ம் தேதி டேங்கரில் டீசல் ஏற்றிச் சென்ற, சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின. அடுத்தடுத்து நடந்த விபத்துகள் குறித்து, ரயில்வே வாரிய தலைவர் சதீஷ், சென்னை மற்றும் திருச்சி ரயில் கோட்ட அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த விபத்துகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கோட்ட ரயில்வே அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி