உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானைகள் உயிரிழப்பை தடுக்க ரயில்வே முயற்சி; கோவை அருகே தண்டவாளத்தில் வேலி அமைப்பு

யானைகள் உயிரிழப்பை தடுக்க ரயில்வே முயற்சி; கோவை அருகே தண்டவாளத்தில் வேலி அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தமிழகம் - கேரளா எல்லையில், வாளையார் வனப்பகுதியில் தண்டவாளத்தின் இருபுறமும் இரும்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. யானைகள் உயிரிழப்பை தடுக்க ரயில்வே துறை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.தமிழகத்திலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில் பாதை, இரு மாநில எல்லையில், அடர்ந்த வனப் பகுதி வழியாக செல்கிறது. யானைகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் இந்த வனப்பகுதியில், ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இதைத் தவிர்க்க ரயில்வே சார்பில், யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு வசதியாக, சில இடங்களில் தண்டவாளத்துக்கு கீழே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன், யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எட்டிமடை மற்றும் வாளையாருக்கு இடையேயான வனப்பகுதியில் வேலி அமைக்கும் பணியையும் ரயில்வே மேற்கொண்டுள்ளது. தண்டவாளத்தின் இருபுறமும் 2 கி.மீ தூரத்திற்கு பழைய தண்டவாளங்களால் ஆன ரயில் வேலி அமைக்கப்படுகிறது.இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது; யானைகள் ரயில் சென்று கொண்டிருக்கும் போது, தண்டவாளத்தை கடந்து காயம் ஏற்படுகின்றன. உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்லாமல், சுரங்கப்பாதை வழியாக செல்வதை உறுதி செய்யவும், இந்த இரும்பு வேலி அமைக்கப்படுகிறது. இது காட்டு யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lokeshwaran KP
ஜன 04, 2025 14:05

யானைகளின் வழித்தடத்தில் ரயில்வே பாதை அமைத்தது மனித தவறு. ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கு அது அவசியம் என்பதால், கிலோமீட்டர் கணக்கில் வேலை அமைத்து அவற்றின் வழித்தடத்தை தடுக்காமல், வேலி அமைத்துள்ள பகுதி முழுவதும் ரயில்வே பாலத்தின் கீழ் யானைகள் கடந்து செல்லும் வகையில் தரைப்பாலம் அமைப்பதே அவற்றை தொந்தரவு செய்யாமல் அவற்றிற்கு ஆபத்து ஏற்படுத்தாமல் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும். மேலும் இந்த ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானைகளின் நடமாட்டத்தை முன்னரே கண்டறிவது சால சிறந்தது


MARI KUMAR
ஜன 02, 2025 13:22

யானை இனம் காக்கப்பட வேண்டும்


சமீபத்திய செய்தி