மேலும் செய்திகள்
48 மணி நேர உண்ணாவிரதம்: ரயில் ஓட்டுநர்கள் போராட்டம்
4 hour(s) ago
வாடகைக்கு ஓடும் சொந்த வண்டி: ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
4 hour(s) ago | 1
நவம்பர் ரேஷன் பொருட்கள் இம்மாதம் சேர்த்து தர முடிவு
5 hour(s) ago | 1
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக, டிட்வா புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனை அகற்றும் பணி நடக்கிறது.வங்க கடலில் உருவான, 'டிட்வா' புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில், வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. மாதவரம், கொளத்துார், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், கொடுங்கையூர், புழல் - செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. சென்னையில் உள்ள 27 சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீர் உடனடியாக மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.அதிக மழைப்பொழிவு எங்கே!
இன்று காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில்எண்ணுார் 146சேத்துப்பட்டு, திருவண்ணாமலை 130திருமயம் 120தாமரைப்பாக்கம் 120விம்கோ நகர் 117மணலி புதுநகரம் 113சத்யபாமா பல்கலை 110திருக்கழுக்குன்றம் 110மேடவாக்கம் 108பள்ளிக்கரணை 103கேளம்பாக்கம் 100உளுந்துார்பேட்டை 99அம்பத்துார் 92துரைப்பாக்கம் 90பெரம்பூர் 89கண்ணகி நகர் 70சோழிங்கநல்லுார் 68கொரட்டூர் 68அயனாவரம் 64தொண்டையார்பேட்டை 58
4 hour(s) ago
4 hour(s) ago | 1
5 hour(s) ago | 1