உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 29 வரை மழை

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 29 வரை மழை

சென்னை:'மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 29ம் தேதி வரை மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, வடக்கு, தெற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் லேசான மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லுார், பிராட்வே பகுதிகளில் தலா 17 செ.மீ., மழை பெய்து உள்ளது. மடிப்பாக்கம், எண்ணுார், கொரட்டூர், செங்குன்றம், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதிகளில் தலா 14 செ.மீ., மழை பெய்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழ வரம், திருத்தணியில் தலா 13, அம்பத்துார், செம்பரம்பாக்கம், ஒக்கியம் துரைப் பாக்கம் பகுதிகளில் தலா 11. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், கலவை, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதிகளில் தலா 10 செ.மீ., மழை பெய்து உள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை, சேலம், திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடல் பகுதி களின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை, மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 29ம் தேதி வரை மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை