உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலுக்குள் புகுந்தது மழைநீர்

உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலுக்குள் புகுந்தது மழைநீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலில் அபூர்வ மரகத நடராஜர் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது. பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் வந்து செல்கின்றனர். இங்கு போதிய வடிகால் வசதியின்றி மழைநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், வெளியே சாலையில் தேங்கிய தண்ணீர் கோவில் உள் பிரகாரங்களில் புகுந்தது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டனர்.

ராமநாதபுரத்தில் மழை வெள்ளம்

இதே போல் ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியது. நான்கு மரங்கள் சாய்ந்தன. ஆளில்லாத இரு பழைய ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. கன மழையால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sridhar
நவ 21, 2024 07:55

HRCE நிர்வாகம் அருமை , எவ்வளவு பாராட்டினாலும் தகும் . ஹிந்துக்கள் வோட்டு உங்களுக்கு தான்.


Kasimani Baskaran
நவ 21, 2024 05:38

வறண்ட பகுதியில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று மராமத்து செய்யாமல் கணக்கெழுதி மராமத்து செய்து விட்டார்கள் போல தெரிகிறது.


சமீபத்திய செய்தி