உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜகண்ணப்பன் துறை மாற்றம்; பொன்முடிக்கு கூடுதலா இலாகா

ராஜகண்ணப்பன் துறை மாற்றம்; பொன்முடிக்கு கூடுதலா இலாகா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில் வாரியம், அமைச்சர் பொன்முடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.தி.மு.க., அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இன்னும் சில நாட்களில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v757crdu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: முதல்வர், பரிந்துரைப்படி ராஜகண்ணப்பனிடம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பொன்முடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. பொன்முடி, வனம், காதி மற்றும் கிராம தொழில் வாரிய அமைச்சராக இருப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இனிமேல் ராஜகண்ணப்பன் பால்வளத்துறையை மட்டும் கவனிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

subramanian
பிப் 14, 2025 09:23

பெயிலில் வந்த அடுத்த நிமிடமே, செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் ஆவதன் மர்மம் என்ன? திமுக குடும்பம் வசமாக சிக்கிக் கொண்டனர். ஊழல் அமைச்சரவை, ஊழல் ஆட்சி ஒழியட்டும்.


தமிழன்
பிப் 13, 2025 21:15

அமைச்சர்களை மாற்றுகின்றனர்.. முதல்வரை எப்போ மாற்றுவார்கள்?


Ramesh Sargam
பிப் 13, 2025 22:30

முதல்வரையும், திமுக ஆட்சியையும் தமிழக மக்கள் மட்டுமே மாற்றமுடியும், அடுத்த தேர்தலில்.


ராமகிருஷ்ணன்
பிப் 13, 2025 19:32

திமுகவின் கொள்கைகள் படி குற்றவாளிகளை கவுரவிக்க விருதுகள் அதிக பொறுப்புகள் தருவார்கள். மேலும் ராஜ கண்ணப்பன் சரியா சுருட்ட தெரியாமல் திணறுவதால். சுருட்டுவதில் மிக திறமையான அணிலுக்கு அடுத்தபடியாக பொன்முடி க்கு பதவி உயர்வு தரப்படுகிறது.


kulandai kannan
பிப் 13, 2025 19:31

பருத்தி மூட்டைகள்


Vel1954 Palani
பிப் 13, 2025 19:13

உத்தமர் பொன்முடிக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு. ஆமா மெட்ராஸ் உயர்நீதி மன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியதே தண்டனையும் வழங்கியதே . பின்னர் உச்சநீதி மன்றம் தீர்ப்பு மாறி வழங்கி தண்டனையை ரத்து செய்ததால் குற்றவாளி இல்லையா . அப்படி என்றால் உயர் நீதி மன்ற தீர்ப்பு தப்பா ?


rajasekaran
பிப் 13, 2025 18:10

செந்தில் பாலாஜி எந்த துறைக்கு மாற்றப்படுவார். அனேகமாக சிறை துறைக்கு இருக்கலாமாம்.


Barakat Ali
பிப் 13, 2025 17:53

ஜெ இதுபோலச் செய்தபொழுது அது ஆணவம் மற்றும் முதிர்ச்சியற்ற செயலாகப் பார்க்கப்பட்டது .....


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 13, 2025 22:46

அது மட்டுமல்ல இலாகா பறிப்பு என்றுதான் அன்றைய பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் இப்போது இலாகா மாற்றம் என்று எழுதுகின்றன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை