உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசுக்கு எதிராக பேசியிருக்க கூடாது பல ஆண்டுகளுக்குப் பின் ரஜினி மனம் திறப்பு

அரசுக்கு எதிராக பேசியிருக்க கூடாது பல ஆண்டுகளுக்குப் பின் ரஜினி மனம் திறப்பு

சென்னை:'பாட்ஷா படவிழாவில், முதல்வர் ஜெயலலிதாவை வைத்துக் கொண்டு, அரசுக்கு எதிராக, நான் பேசியிருக்கக் கூடாது' என, நடிகர் ரஜினி பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் ஆவணப்படம் வீடியோவில், ரஜினி பேசியிருப்பதாவது:என் மீது மிகவும் அன்பு காட்டியவர்கள் பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீரப்பன். இவர்களில் யாருமே இப்போது இல்லை என, நினைக்கும் போது, அவர்களை மிஸ் செய்கிறேன். 'பாட்ஷா' படத்தின் 100-வது நாள் விழாவில், அ.தி.மு.க., அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில், வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசினேன்.அமைச்சராக இருந்த வீரப்பனை வைத்துக் கொணடு, நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு அது குறித்து சரியான தெளிவு இல்லை. வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து, ஜெயலலிதா துாக்கி விட்டார். அரசுக்கு எதிராக ரஜினி எப்படி பேச முடியும் எனக் கூறி, அவரை துாக்கி விட்டார். அது தெரிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னால் தான் அவருக்கு இப்படி ஆனது என நினைத்து, எனக்கு இரவெல்லாம் துாக்கம் வரவில்லை. அப்போதே வீரப்பனுக்கு போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை. காலையில் போன் செய்த போது, அவர் எடுத்து, ஒன்றுமே நடக்காத மாதிரி, 'பதவி தானே... விடுங்க. அதைப்பற்றி எதுவும் நினைக்காதீங்க. நீங்க மகிழ்ச்சியா இருங்க. இப்ப என்ன படப்பிடிப்பு?' என்று சர்வ சாதாரணமாக கேட்டார். ஆனால், என் மனதில் இருந்து, அந்த தழும்பு எப்போதுமே போகாது. ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க, சில காரணங்கள் இருந்தாலும், இந்த காரணம் மிகவும் முக்கியமானது. 'நான் ஜெயலலிதாவிடம் பேசட்டுமா?' என்று கேட்டேன். ஆனால், அவர், 'உங்கள் மரியாதையை இழக்க வேண்டாம்' என, கேட்டுக்கொண்டார். 'அப்படி நீங்கள் சொல்லி, அங்கே போய் சேர வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இதை அப்படியே விட்டுவிடுங்கள்' என்றார். அப்படி ஒரு பெரிய மனிதர். அவர் உண்மையிலேயே கிங் மேக்கர்.இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை