| ADDED : ஏப் 26, 2025 02:03 AM
சென்னை: ''காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்,'' என, நடிகர் ரஜினி தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:காஷ்மீரில் அமைதி நிலவுவது, சகஜ நிலை திரும்பி இருப்பது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை. அதைக் கெடுக்க வேண்டும் என்று,காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்; இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை செய்தவர்களின், பின்னால் இருப்பவர்களை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோல் மறுபடியும் செய்ய, அவர்கள் கனவிலும் எண்ணக்கூடாது. அதை மத்திய அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ, அதை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.