உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜ்யசபா தேர்தல் : ரபி பெர்னார்ட் மனு

ராஜ்யசபா தேர்தல் : ரபி பெர்னார்ட் மனு

சென்னை : ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக, ரபி பெர்னார்ட் நேற்று மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.வி.ராமலிங்கம் தன் பதவியை ராஜினாமா செய்ததால், காலியாக உள்ள ஒரு இடத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மனு தாக்கல், கடந்த 6ம் தேதி துவங்கியது. ஒரு இடம் மட்டுமே காலி என்பதால், சட்டசபையில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள அ.தி.மு.க.,வே இதில் பெற்றி பெறும் நிலை உள்ளது. அ.தி.மு.க.,வின் வேட்பாளராக வில்லியம் ரபி பெர்னார்ட் அறிவிக்கப்பட்டார். இவர், தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலர் ஜமாலுதீனிடம் நேற்று பகல் 12.10 மணிக்கு மனு தாக்கல் செய்தார். அவருடன் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உட்பட, மூத்த அமைச்சர்கள் வந்திருந்தனர்.

மனு தாக்கலுக்கு பின், ரபி பெர்னார்ட் கூறும் போது, ''அ.தி.மு.க.,வின் எளிய தொண்டனான என்னை நம்பி, பெருந்தன்மையுடன், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி,'' என்றார்.

மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள். மனுக்கள் நாளை பரிசீலிக்கப்படும். இதுவரை, அரசியல் கட்சிகள் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளன்று, ரபி பெர்னார்ட் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை