உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமர் கோவில் திறப்பு விழா: அண்ணாமலை அழைப்பு

ராமர் கோவில் திறப்பு விழா: அண்ணாமலை அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ராமர் கோவிலை, பிரதமர் மோடி வரும், 22ம் தேதி திறந்து வைக்கிறார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, இந்த விழாவில் பங்கேற்க, நாடு முழுதும் உள்ள மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னை பாலவாகத்தில் தான் வசிக்கும் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்று, ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை வழங்கினார். இதுகுறித்து, அண்ணாமலை விடுத்த அறிக்கையில், 'பகவான் ஸ்ரீராமன் கோவில் திறப்பு விழா, பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும், மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒப்பற்ற விழாவில் அனைவரின் வருகை, பங்களிப்பை வேண்டுகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை