மேலும் செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள்-22
23-Mar-2025
தவறு செய்யாதீர் தவறு செய்பவர்கள் உலகில் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். இதனால் சமுதாயம் அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது. இது பற்றி நபிகள் நாயகம் சொல்வதை கேளுங்கள். *குற்றம் என அறிந்தும் ஒருவர் அதை செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவார். * அநியாயமான வாதங்களுக்கு துணை இருப்பவர் நரகத்தின் பாதையில் பயணிக்கிறார். * இல்லாததை இருக்கிறது என்றும், இருப்பதை இல்லை என்றும் கூறுவது குற்றம். *உதவி செய்தவருக்கு தீமை செய்வதும், குற்றமற்றவர் மீது வீண்பழி சுமத்துவதும், உறவினரோடு சேர்ந்து வாழ விரும்புபவரை வெறுப்பதும் பாவம். *அநீதி இழைக்கப்பட்டவன் பிரார்த்தனைக்கு பயப்படுங்கள். ஏனெனில் அவர்களின் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. * அநாதைக்கு அநீதி இழைத்தால் அவன் கடுங்கோபம் கொள்வான். * தெரியாமல் தவறு செய்தால் தொழுகையால் சரிசெய்யுங்கள்.* தொழுகை, தர்மம் மூலம் குற்றத்திற்கு பரிகாரம் தேடுங்கள்.இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி
23-Mar-2025