விழுப்புரம்: கட்சி விரோத நடவடிக்கை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிக்க அன்புமணிக்கு வரும் 10ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.கடந்த 2024 டிச., 28ம் தேதி நடந்த பா.ம.க., பொதுக் குழுவில், ராமதாஸ் -- அன்புமணி இடையே வெடித்த மோதல், எட்டு மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. இருவரும் தனித்தனியே பொதுக் குழுவை கூட்டி, 'நானே தலைவர்' என அறிவித்தனர். மகன் அன்புமணியை, ராமதாஸ் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு, அன்புமணி நேரடியாக பதில் அளிக்கவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1vzz3ekf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக் குழுவில், அன்புமணி மீது கட்சி ரீதியிலான செயல்பாடுகள் தொடர்பாக 16 குற்றச்சாட்டுகளை கூறி, விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கான கெடு ஆக.,31 அன்றுடன் முடிந்த நிலையில், இது தொடர்பாக ஆலோசிப்பதற்கு, ராமதாஸ் தலைமையில் பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம், தைலாபுரத்தில் நேற்று முன்தினம்( செப்.,01) நடந்தது. அதில், அன்புமணிக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு, அவர் பதில் அளிக்காதது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து ராமதாஸ் முடிவெடுப்பார் என அக்கட்சி அறிவித்தது.இந்நிலையில் விழுப்புரத்தில் இன்று நிருபர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது: அன்புமணிக்கு முதல்முறையாக அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு பதில் வரவில்லை. நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாக அனுப்ப வேண்டும் என சொன்னோம். ஆனால் பதில் வரவில்லை. இது குறித்து நிர்வாகக் குழு கூடி ஆலோசித்தது. அப்போது ஒழுங்கு நடவடிக்கை குழு வேறு விதமாக பரிந்துரை செய்தது. அதனை நிர்வாகக்குழு ஆராய்ந்தது. இன்னும் ஒரு வாரம் அவகாசம் அளிக்கலாம் என்ற முடிவில் 10ம் தேதி வரை அவகாசம் அளிக்க ஒரு மனதாக முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மேலும் அன்புமணி மீண்டும் பதிலளிக்கவில்லை என்றால் எனக் கேட்ட கேள்விக்கு, '' போகப் போகத்தெரியும்' என்ற பாடலை பாடிய ராமதாஸ், இன்னும் எத்தனை முறை தான் இந்த பாடலை பாடுவது' என பதிலளித்தார். ஒரு வாரம் அவகாசம் என்பது பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, எதற்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கிறோம் எனக்கூறியதுடன், பதிலளிக்கவில்லை என்றால், ஒழுங்கு நடவடிக்கை குழு, நிர்வாக குழுவிடம் கருத்து கேட்டு அதன்படி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். இது பற்றி சேலத்தில் பேட்டியளித்த அன்புமணி, ராமதாஸ் கெடு விதித்தது பற்றி நாளை பதில் அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.