உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளை மூட சொல்கிறார் ராமதாஸ்

தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளை மூட சொல்கிறார் ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டிவனம்:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திண்டிவனம், தைலாபுரத்தில் அளித்த பேட்டி: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், மூடப்பட்ட மதுக்கடைகள் 500 ஆக இருந்தாலும், கடந்த மூன்றரை ஆண்டுகளில், 600 மனமகிழ் மன்றங்கள் தமிழகம் முழுதும் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவது போல், மனமகிழ் மன்றத்தில் அனைத்து மது வகைகளும் விற்கப்படுகின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 900 மனமகிழ் மன்றங்களும், தற்போது தி.மு.க., ஆட்சியில் 600 என, மொத்தம் 1,500 மனமகிழ் மன்றங்கள் உள்ளன. தி.மு.க., ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை.கடந்த தீபாவளிக்கு, 467 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டைவிட, 20 சதவீதம் கூடுதலாக விற்க இலக்கு நிர்ணயிக்க, வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.தீபாவளிக்கு முன்னும் - பின்னும் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இதேபோல், 1,500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும்.தமிழகத்தில், 39 மக்களவை தொகுதிகள் 31 ஆக குறைக்கப்பட உள்ளதை எதிர்த்து, மத்திய அரசிடம் தான் போராடவேண்டும். அதைவிடுத்து, மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது தவறு. இப்போதே, அரசால் தரமான கல்வி, மருத்துவம் வழங்க இயலவில்லை.ஓசூரில் டாடா நிறுவனத்தில் பணியாற்றிய 800 தமிழர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது புதிய ஊழலுக்கு வழிவகுக்கும். ஒரு தனியார் பஸ் நாளொன்றுக்கு 600 கி.மீ., இயக்கப்பட்டால், போக்குவரத்துக் கழகத்திற்கு, 11,400 ரூபாய் இழப்பீடு ஏற்படும். புதிய பஸ்களை வாங்காமல், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதால், பஸ் கட்டணமும் உயர்த்தப்படும். காலப்போக்கில் அரசு போக்குவரத்து கழகம், தனியார் மயமாக்கப்படும். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை, அரசு கைவிட வேண்டும்.

- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 26, 2024 13:45

இவரு தமிழ்ழே பேசறேன் சொல்லி புரியாத பாஷையில் பேசராரு. அதுனால தானே என்னவோ ஆட்சியில் இருக்கிறவங்களுக்கு புரியறது இல்லை போல். மனமகிழ் மன்றம் மனமகிழ் மன்றம் அப்படி சொல்ராரு. மனசை மகிழ்விக்கிற மன்றம் இடம் தானேனு நினைச்சுகிறாங்க போல். நல்லா சுத்தமா எல்லாருக்கும் ஏன் மது பிரியர்களுக்கே புரியற மாதிரி நல்லா அழுத்தமா ஃபார் அப்படின்னு சொல்லனுமில்லே. சார் உங்களுக்கு வயசாயிடுச்சு இப்ப போய் தமிழ் வளர்க்கிறேன்னு தமிழக தமிழ் இளைஞர்கள் ஆட்சியாளர்கள் புரியாத பாஷையிலே பேசாதீங்க சார். உங்க வாய்ஸ் அப்புறம் எடுபடாம போயிடும்


skv srinivasankrishnaveni
அக் 26, 2024 13:22

ஆளும்கச்சிக்கு சாமியுமில்லேய் பக்தியும் இல்லேய் ஏவாகுடிச்சுசெத்தாலும் அவலையுமில்லீங்க கொடியே வருமானம்வந்தால்போதும் காசுதான் குலசாமி


skv srinivasankrishnaveni
அக் 26, 2024 13:00

கொண்தாந்த வனே திமுக தானுங்கோ அவனுகளா மூடுவானுக ஏழைகளுக்கு என்னாத்துக்கு தீவாளி ன்னே கேக்கும் சுயநலமியாச்சே 20கோடிக்குமேலே வைக்கணும்னு டார்கெட் போட்டுருக்கானுகளே நாசமாப்போக


Azar Mufeen
அக் 25, 2024 23:00

மருத்துவர் அய்யா பக்கத்துல உங்க கூட்டணி கட்சி ஆளும் புதுவையில் மூடச்சொல்லுங்கள்


Ramesh Sargam
அக் 25, 2024 19:54

அன்று ஒரு நாள் மூடுவதால் என்ன பயன் ராமதாஸ் அவர்களே? மூடுவார்கள் என்று தெரிந்தால், குடிப்பிரியர்கள் அதற்கு முதல் நாளே தங்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தேவையான சரக்கை வாங்கி வீட்டில் அடுக்கிவிடுவார்கள்.


angbu ganesh
அக் 25, 2024 14:39

சார் நன்றாக சொன்னீர்கள் ரம்ஜான் பக்ரீத் மிலாடி நபிக்கெல்லாம் மூடரானுங்க இவனுங்களுக்கு பயந்து ஏன் விநாயகர் சதுர்த்தி மற்றும் முக்கியமான ஹிந்து பண்டிகைகளுக்கு டாஸ்மாக்க மூடனும் மூட மாட்டான், அன்னிக்குத்தான் நல்ல கள்ள கட்டுவான்


Mani . V
அக் 25, 2024 13:42

யோவ், நாங்களே அந்த சமயத்தில்தான் மிகப் பெரிய வசூல் செய்ய வேண்டும் என்று கூடுதலாக கவுண்டர் திறந்துள்ளோம். இதில் இவருக்கு கடையை மூடணுமாம். திமுக ஆட்சி இருக்கும் வரையில் அப்படி ஒன்றே நடக்காது. நடக்கவும் விடமாட்டோம்.


சம்பா
அக் 25, 2024 13:14

ஒன்னும் பிரச்சன இல்ல மூடலாம் தாராளமா வெளிய கிடைக்கும்


raja
அக் 25, 2024 12:51

பாமரனுக்கும் வைகுண்டுக்கும் இங்கே டாஸ்மாக்கை மூடி விடுவார்களோ.. நம்பிலைப்பில் மன்னல்லி போட்டு விடுவார்களோ என்ற பயம் வந்து விட்டது....இருவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மது விலக்கை அமுல்படுத்தி சிரப்பாய் ஆட்சி நடத்திய தமிழகத்தை அனைத்து துறையிலும் முன்னேற்றிய காமராஜர் ஆண்டு காலத்திலும் தீபாவளிகள் வந்து போயின ..


kantharvan
அக் 25, 2024 13:33

என்ன செய்ய அப்போ நேரு போன்ற தூயவர் அல்லவா நாட்டை ஆண்டார். ஆனால் இன்று ....


raja
அக் 25, 2024 19:00

பல இக்கட்டான நேரங்களில் முடிவெடுக்க தெரியாத நேருவுக்கு காமராஜர் தான் ஆலோசனை பல வழங்கினார் என்பது வரலாறு...


RAMAKRISHNAN NATESAN
அக் 25, 2024 19:34

அவர்கள் இருவருக்கு மட்டுமல்ல ...... பலருக்கும் இந்தக் கவலை வந்து அவர்களை சவலை ஆக்கிவிட்டது .....


RAMAKRISHNAN NATESAN
அக் 25, 2024 20:14

நேரு போன்ற தூயவர் அல்லவா நாட்டை ஆண்டார். ஆனால் இன்று .... பிற்கால முகலாய அரசரை விட்டுக்கொடுக்க மாட்டாரு கந்தர்வன் பாய் .... வெரிகுட் .... கீப் இட் அப் ..... நேரு முதலாளித்துவத்தை ஒருங்கிணைத்த ஒரு சோசலிஸ்ட் ஆக இருந்தார் என்பது ஒரு வினோதமான முரண்பாடு ..... அதன் காரணமாக நிர்வாகம், பன்னாட்டு உறவு, தொழில் மயமாக்கலில் அவர் தோல்வி அடைந்தார் .... தொழிற்புரட்சிக்கும், விவசாய முன்னேற்றத்துக்கும் அவர் முக்கிய காரணமல்லர் .... பி வி நரசிம்ம ராவ் போட்ட புரட்சிப் பாதையில்தான் இந்தியா இன்று பயணிக்கிறது ... சுதந்திரம் அடைந்த பிறகு பரம்பரை பணக்காரத் தொழிலதிபர்கள் தாமே முன்வந்து தொழில் வளத்தைப் பெருக்கினர் .... சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால் உண்மை விளங்கும் ....


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 26, 2024 13:51

நேரு எங்கே சார் நாட்டை ஆண்டாரு. அவரு மொழிவாரி மாகாணம் இன் வாரி மாகாணம் அப்படின்னு நாட்டை துண்டு துண்டாக வெட்ட அல்லவா செஞ்சாரு. அதோட பாதிப்பு இன்னைக்கு வரைக்கும் இருக்கு. இனி எவன் தனக்கு ஒரு தனி மாநிலம் வேனுமின்னு கொடி தூக்க போறாங்கன்னு தெரியவில்லை. எதுக்கும் தமிழக மக்கள் ஜாக்கிரதையா இருக்கனும்.


தமிழ்வேள்
அக் 25, 2024 12:14

டுமீல் நாட்டு பெருங்குடி மஹாஜனகளுக்கு, ஒரு நாள் குடிக்காமல் இருந்தால், குறைந்த போய்விடும்? சாராயம் இல்லை என்றால் தூக்கில் தூங்குவார்கள் போல .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை