உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாமக தலைவர், நிறுவனராக ராமதாஸ் செயல்படுவார்: பொதுக்குழுவில் தீர்மானம்

பாமக தலைவர், நிறுவனராக ராமதாஸ் செயல்படுவார்: பொதுக்குழுவில் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: பாமக தலைவர், நிறுவனராக ராமதாஸ் செயல்படுவார் என பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதுச்சேரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்புப் பொதுக்குழு நடந்தது. ராமதாசின் மூத்த மகள் காந்திமதிக்கும், பேரன் முகுந்தனுக்கும் மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விபரம் பின்வருமாறு:* பாமக தலைவர், நிறுவனராக ராமதாஸ் செயல்படுவார்.* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.* வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் ஆக்கப்பட்டும் நிறைவேற்றாமல் இருப்பதற்கு பாமக நிறுவனர் தலைமை மீண்டும் போராட்டம் நடத்தப்படும்.* தமிழக அரசு தட்டி கழிக்காமல் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.* சின்னம் பெறுதல், வேட்பாளர்களுக்கான படிவம் அனைத்தும் நிறுவனர் கையெழுத்திட்டு கொடுக்க முடியும்.* நிறுவனர் ஒப்புதல் கொடுத்த பிறகு, நிறுவனர் அழைக்கப்பட்டு பொதுக்குழு நடத்த வேண்டும். பொதுக்குழுவில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பதாகைகள்

பாமக பொதுக்குழு கூட்டத்தில், 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; அய்யாவின் முடிவே இறுதியானது” என அக்கட்சித் தொண்டர்கள் பதாகை ஏந்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

GMM
ஆக 17, 2025 19:53

வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீடு போல் பிற சாதிக்கு வேண்டாமா? கோரிக்கை சமூக நீதிக்கு எதிர். சாதி கணக்கீடு காங்கிரஸ் மோசடி திட்டம். சிறுத்தை மற்றும் வன்னியர் சாதி சலுகை விட்டு வெளிவர வேண்டும். இருந்தால், பிற சமூக மக்கள் ஒத்துழைப்பு குறையும் . சாதி, மத இட இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் முற்றிலும் நீக்க வேண்டும். பல பிரிவு மக்கள் வாழ்வதால், சாதி, மத கட்சிகள் ஒழிய அதிக ஒரு வாக்கு வெற்றியை தீர்மானிக்க கூடாது.


panneer selvam
ஆக 17, 2025 14:26

It will be a case study how a family oldie nearly destroyed a e based party just because of egoism


M Ramachandran
ஆக 17, 2025 14:19

வன்ம அரசியல் ஜாதிய அரசில் தவிர என்ன பெரிதாக மக்களுகாக கிழித்துள்ளார்


M Ramachandran
ஆக 17, 2025 14:18

வாரிசு அரசியலை முன்னின்று நடத்து இவரும் வியாதிக்கு விளக்கல ஜாதி அரசியலிய்ய தவிர என்ன போது மக்களுக்கா நடத்தியுள்ளார்.


Anantharaman Srinivasan
ஆக 17, 2025 14:10

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை தந்தைக்கு உபதேசம் செய்த வரலாறும் புராணத்தில் உண்டு.


Anantharaman Srinivasan
ஆக 17, 2025 14:07

அடுத்த போட்டி மாங்கா சின்னம் யாருக்கு..?


பாரத புதல்வன்
ஆக 17, 2025 14:04

மாம்பழம் சீக்கிரம் அழுகிவிடும்....


Santhakumar Srinivasalu
ஆக 17, 2025 13:28

எவ்வளவு ஆழம் என்பது இனி மேல் தான் தெரியும்!


SUBBU,MADURAI
ஆக 17, 2025 13:50

இன்று நடந்தது பெரிய மாங்காயின் பொதுக்குழுவின் அறிவிப்பு நாளை சின்ன மாங்காயின் பொதுக்குழு கூடும் தேதி என்று என அறிவிக்கப்படும்.


Thravisham
ஆக 17, 2025 14:11

டிவியில் தான் காமெடி பார்த்து இருந்தோம். இப்போ நிஜ காமெடி. எப்படியோ இந்த மரவெட்டி ஓனர் ஒழிஞ்சா சரி. சுயநலத்துக்காக ஓர் ஜாதி கட்சிய ஆரம்பிச்சு அதுல தன் குடும்பத்தையே திணித்து விட்டார். அதிலிருக்கும் தொண்டர்களும் இவர் பேச்ச நம்பி தங்களுடைய வாழ்க்கையை தொலைத்ததுதான் மிச்சம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை