உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்; பா.ம.க.,வில் இருந்து நீக்க தயாராகும் ராமதாஸ்

அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்; பா.ம.க.,வில் இருந்து நீக்க தயாராகும் ராமதாஸ்

திண்டிவனம் : ராமதாஸ் தரப்பு நேற்று கூட்டிய பா.ம.க., சிறப்பு பொதுக்குழுவில், சேலம் எம்.எல்.ஏ., அருள், முன்னாள் எம்.பி., துரை, தலைமை நிலைய செயலர் அன்பழகன் உள்ளிட்ட, எட்டு உறுப்பினர்கள் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சி நிறுவனர் ராமதாசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதுகுறித்து, கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது:

புதுச்சேரி அருகே சங்கமித்ரா மண்டபத்தில் கடந்த ஆண்டு டிச., 22ல் கூட்டப்பட்ட கட்சியின் பொதுக்குழுவில் அன்புமணி மைக்கை துாக்கி போட்டது, ராமதாசுக்கு எதிராக பேசியது, பா.ம.க.,வின் தலைமை அலுவலகம் பனையூரில் துவங்கியது. அதற்கு உண்டான மொபைல் போன் எண் கொடுத்தது, கட்சியை அன்றே பிளவுபடுத்துவது போன்று குழப்பத்தை ஏற்படுத்தியது உள்ளிட்டவை கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாத செயல்களாக கருதப்படுகின்றன தைலாபுரத்தில் மாவட்டச் செயலர்கள் கூட்டம் அறிவித்தபோது, மா.செ.,க்களை தொடர்பு கொண்டு கூட்டத்திற்கு செல்ல வேண்டாமென தடுத்தது, அன்புமணியை கட்சியிலிருந்து நீக்க அழைப்பதாகவும் கையெழுத்து வாங்கி கொண்டு ராமதாஸ் அனுப்பி விடுவார் என மா.செ.,க்களிடம் தெரிவித்தது, கட்சியை பிளவுபடுத்த திட்டமிட்ட செயலாக கருதப்படுகிறது ராமதாசை தவறாக சித்தரித்து முகநுால் பக்கத்தில் பதிவிட்டது, தமிழகத்தின் ஆளுமை மிக்கவர்கள், பேச்சு நடத்தியபோது, அன்பு மணி அதை ஏற்றுக் கொள்ளாமல் உதாசீனப்படுத்தியது, தைலாபுரம் இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது. தலைமையின் அனுமதியின்றி பொதுக்குழு கூட்டம் நடத்தியதோடு, அங்கு நாற்காலியில் துண்டு போர்த்தி, அது ராமதாசுக்கானது என அறிவித்தது, கடவுள் சிலை முன் ராமதாசுக்கு நல்ல புத்தியை கொடு என கேட்க சிலரை துாண்டியது உள்ளிட்ட அநாகரிக செயலை ஏற்க முடியாது தலைமையின் எவ்வித அனுமதியும் இன்றி, அன்புமணி உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்வது கபட நாடக மாக கருதப்படுகிறது தைலாபுரம் தோட்டத்திற்கு வரும் கட்சி நிர்வாகிகளிடம் பணம், பதவிகளை கொடுப்பதாக தெரிவித்து, பனையூருக்கு அழைத்துச் சென்றது. கட்சி நிறுவனர் ராமதாஸ் தன் பெயரையும், படத்தையும் அன்புமணி பயன்படுத்தக்கூடாது என தெரிவித்த போதும், குலசாமி என கூறி கொச்சைப்படுத்தி வருவது ராமதாசால் உருவாக்கப்பட்ட மக்கள் தொலைக்காட்சியில், ராமதாஸ் தொடர்பான செய்திகளை போடக்கூடாது என அறிவுறுத்திய தோடு, தொலைகாட்சியையே அபகரித்து கொண்டது, 'பசுமை தாயகம்' சுற்றுச் சூழல் அமைப்பை கைப்பற்றி கொண்டது பா.ம.க., தலைமை அலுவலகம் சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வந்ததை, ராமதாசுக்கு தெரியாமலேயே தியாகராய நகருக்கு மாற்றியது ராமதாசால், கடந்த மே 30க்கு பின், கட்சியின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டோர் நியமனங்கள் அனைத்தும் செல்லும், அதேநேரம், ராமதாசால் பொறுப்புகளில் இருந்து நீக்கப் பட்டோர், அதே பொறுப்பில் நீடிப்பர் என அறிவித்தது நிறுவனர் ராமதாசிடம் எதுவும் பேசாமல், 40 தடவை பேசியதாக பொதுவெளியில் பொய் பேசியது, கட்சி நிர்வாகிகள் சிலர், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோது கூட்டு பிரார்த்தனை செய்வோம் என கூறியது ஆகிய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஜி.கே.மணி கூறினார். ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிக்கையை வைத்து, அன்புமணியை கட்சியை விட்டு நீக்கும் அறிவிப்பை வெளியிட ராமதாஸ் தயாராகி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை