உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் -- தலைமன்னார் பயணியர் கப்பல் இயக்க திட்டம் அமைச்சர் வேலு அறிவிப்பு

ராமேஸ்வரம் -- தலைமன்னார் பயணியர் கப்பல் இயக்க திட்டம் அமைச்சர் வேலு அறிவிப்பு

தமிழகம் முழுதும், 67,216 கி.மீ., நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்காண்டுகளாக, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 6,665 கோடி ரூபாயில், 831 கி.மீ., இருவழிச் சாலைகள், நான்குவழிச் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. 2,916 கோடி ரூபாயில், 2,038 கி.மீ., இடைவழி சாலைகள், இருவழிச் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது, 71 ரயில்வே மேம்பால பணிகள் நடந்து கொண்டிருந்தன. சில இடங்களில் நில எடுப்பு பணிகள் முழுமை பெறாமல் இருந்தன.சிறப்பு நிலம் எடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பணிகள் வேகப்படுத்தப்பட்டன; 36 பணிகள் முடிக்கப்பட்டன. மீதமுள்ள 35 பணிகள் நடந்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், 858 கோடி ரூபாயில் 25 புதிய ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. சாலை விபத்துகளை தடுக்க, 415 கரும்புள்ளி பகுதிகள் கண்டறியப்பட்டு, அதில், 408 மேம்படுத்தப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுமத்தின் வழிகாட்டுதலின்படி, சாலை பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.கடலுார், நாகை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி துறைமுங்களில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு, இந்தியாவிலேயே முதன்முறையாக பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு, பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்க, 118 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவியுடன் கப்பல் இயக்கப்படும்.- வேலுபொதுப்பணித் துறை அமைச்சர்

ரூ.22 கோடியில் 4 சுற்றுலா மாளிகை

கடலுாரில் 6 கோடி ரூபாய், காஞ்சிபுரத்தில் 3 கோடி ரூபாய், திருவள்ளூரில் 3 கோடி ரூபாய், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 9.90 கோடி ரூபாய் என, 21.90 கோடி ரூபாயில் புதிய சுற்றுலா மாளிகைகள் கட்டப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 2.50 கோடி ரூபாய், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 5 கோடி ரூபாய், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 கோடி ரூபாய் என, 9.50 கோடி ரூபாயில், மூன்று ஆய்வு மாளிகைகள் அமைக்கப்படும்.- வேலு, பொதுப்பணித் துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஏப் 02, 2025 18:38

அங்கே பி.எம் க்கீ யோஜனான்னு உருட்டுனா இங்கே முதல்வர் திட்டம்னு உருட்டல்.


அப்பாவி
ஏப் 02, 2025 18:26

உங்களாலே கப்பல் இயக்க முடியாதுன்னா விட்டுத் தொலைங்க.மத்திய நிதி–ன்னு எதுக்கு அலையறீங்க? அப்புறாம் ஸ்டிக்கர் ஒட்டிக்கிறீங்கன்னு அவிங்க சொல்வதற்காகவா? இருக்குற உள்ளூர் போக்குவரத்தை , சாலைகளை சரி செய்யுங்க. தலைமன்னார் போகணும்னு இங்கே யாரும் தவிக்கல.


முக்கிய வீடியோ