உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம் வாபஸ்; இன்று மீன்பிடிக்க செல்கின்றனர்

ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம் வாபஸ்; இன்று மீன்பிடிக்க செல்கின்றனர்

ராமேஸ்வரம் : -இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க கோரி 2ம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா சமரச பேச்சையடுத்து மாலை உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று இன்று(பிப்.26) மீன் பிடிக்க செல்கின்றனர்.இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களில் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் 6 மாதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீனவர்களை விடுவிக்க கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்.17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து 15 கி.மீ., நடை பயணம் போராட்டம் நடத்தினர். மேலும் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் பிப்.24 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். 2ம் நாளான நேற்றும் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், எமிரேட் உட்பட ஏராளமான மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இன்று கடலுக்கு செல்கின்றனர்

இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு உண்ணாவிரத பந்தலுக்கு வந்த எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 'ஓரிரு நாட்களில் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை சட்ட ரீதியாக மீட்க தனது சொந்த செலவில் அங்கு வழக்கறிஞர் நியமித்து வாதாடப்படும் என மீனவர்களிடம் உறுதி அளித்ததார்.இதையடுத்து மீனவர்கள் வாழ்வாதாரம் கருதியும் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். இன்று காலை மீன்பிடிக்க செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை