உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடை நாளை இயங்கும்

ரேஷன் கடை நாளை இயங்கும்

சென்னை: தெடார் விடுமுறையால், நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என, உணவுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, மூன்றாவது, நான்காவது ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினமாக உள்ளது. இந்நியைலில், நாளை மறுநாள் ஆயுதபூஜை, தொடர்ந்து விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையைத் தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருகின்றன. அதனால், பொருட்களை வாங்க விரும்புவோருக்கு உதவும் வகையில், மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையான நாளை ரேஷன் கடைகள் இயங்கும் எனவும், அதற்குப்பதில், நவ., 21ம் தேதி விடுமுறையாக தொடரும் எனவும்,, உணவு வழங்கல் துறை ஆணை யர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை