உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார்: ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார்: ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அமெரிக்க வரி நெருக்கடியை எதிர்கொள்ள, மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவின் 50 சதவீத வரியால், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன. உற்பத்தி, மென்பொருள் துறைகளில் முன்னணியில் உள்ள தமிழகம், அமெரிக்காவை தன் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில், தமிழகத்தின் ஏற்றுமதியில், 31 சதவீதம் அமெரிக்காவிற்கே சென்றது. இதனால், 50 சதவீத வரி விதிப்பு, தமிழகத்தை அதிகம் பாதிக்கிறது. இந்த கடின சூழலில், மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானதாக இல்லை. தமிழக அரசு தன்னால் இயன்றதை செய்து வருகிறது. ஆனாலும், மாநில அரசுக்கென வரம்புகள் உள்ளன. எனவே, மத்திய அரசு, தன் பங்கை உணர்ந்து, குறிப்பாக ஜவுளித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஏற்றுமதி துறைகளை பாதுகாக்க, புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் நடத்திய பகுப்பாய்வில், 'அமெரிக்கா வரி விதிப்பால், தமிழகத்திற்கு, 33,800 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' என கணிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, இயந்திரங்கள், வைரம் மற்றும் நகைகள், வாகன உதிரிபாகங்கள் ஆகிய துறைகளில், வேலை இழப்பு 13ல் இருந்து 36 சதவீதம் வரை உயரும் என அஞ்சப்படுகிறது. சர்வதேச பேச்சுகள், சுங்கவரி கொள்கை, பொருளாதார ஆதரவு போன்வற்றில், மத்திய அரசின் முன்முயற்சிகளும் ஆதரவும் இன்றியமையாதவை. ஏற்றுமதியை பாதுகாக்கவும், வேலை இழப்பிலிருந்து தொழிலாளர்களை காப்பாற்றவும், மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற, தமிழகம் தயாராக உள்ளது. ஒன்றிணைந்து செயல்பட்டால், ஒரு சிக்கலான தருணத்தை மாற்றத்திற்கான வாய்ப்பாக மாற்ற முடியும். இதற்காக மத்திய அரசு தீவிரமாகவும், ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Ganapathy
செப் 01, 2025 09:11

உருட்டு திராவிட எலி எதுக்கு திடீருனு ஓடுது?


M Ramachandran
ஆக 31, 2025 15:33

ஏன்?


Sridhar
ஆக 31, 2025 14:32

வரவர இந்த ஆளோட காமெடிக்கு அளவே இல்லாம போயிடிச்சு. எப்படித்தான் தமிழக மக்கள் இவிங்களுக்கு வோட்டு போடறாங்களோ


Sun
ஆக 31, 2025 14:12

என்னது இணைந்து செயல் படத் தயாரா? என்னவோ இவர் சீன அதிபர் போலவும், தமிழ்நாடு வேற நாடு போலவும் பேசுறார்? இணைந்து தான் செயல் படணும் அய்யா.


Barakat Ali
ஆக 31, 2025 13:10

பலர் இதில் இருக்கும் நரித்தனத்தைக் கவனிக்காமல் கருத்திட்டுள்ளீர்கள். எதற்கெடுத்தாலும் தொட்டு கும்பிடும் டாஸ்மாக், ஓசி பிரியாணி தற்குறிகளுக்கு வேண்டுமானால் இது சாணக்கியத்தனமாகத் தெரியும்.. துக்ளக்காரின் இந்த அணுகுமுறை மத்திய அரசின்மீது பழிபோட்டுத் தான் தப்பித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் விசயமுள்ள கொத்தடிமை கொடுத்த ஐடியாவா இருக்கும். வர்த்தக கூட்டமைப்பு அல்லது ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மத்திய தொழில்துறை அமைச்சருடன் அதிகாரிகள் மூலமாக நேரடித் தொடர்பில் இருப்பார்கள்.. மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதால் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பில்லை.. ஆகவே எங்கள் துக்ளக்கார் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள அதிகம் வாய்ப்பு .....


xyzabc
ஆக 31, 2025 13:06

உன்னுடைய நல்ல எண்ணத்துக்கு மகிழ்ச்சி. ஆனால் அனாவசியமாக குறை சொல்லவேண்டாம். மத்திய அரசுக்கு தெரிந்த விஷயமே.


Enrum anbudan
ஆக 31, 2025 12:53

இந்த ஆள் உண்மையிலேயே முதல்வருக்கு தகுதியானவர் தானா ? ஆட்சி பறிபோகப்போகின்றது என்பது முடிவானபின் மத்திய ஒன்றிய - இவர்கள் அகராதியில் அரசிற்கு அமைதி தூது கேவலமாக இருக்காதா இவர்களுக்கு?


Sitaraman Munisamy
ஆக 31, 2025 12:31

ஒன்றிய அரசு இப்போதைக்கு மத்திய அரசு என்று மாறிவிட்டது


Davamani Arumuga Gounder
ஆக 31, 2025 13:19

மத்திய அரசு என்று ஸ்டாலின் கூறினாரா? இல்லை, இது எங்களை ஆறுதல்படுத்த கூறும் சொல்லா?


sankaranarayanan
ஆக 31, 2025 11:57

இந்த நல்ல எண்ணம் எப்போது உண்டாயிற்று எத்தனை நாட்கள் தாங்கும் மாறாதே


Matt P
ஆக 31, 2025 11:52

ஸ்டாலின் மோடிக்காக-inthiyaavukkaaka வெள்ளை மாளிகையில் Trumpai சந்தித்து பேசினாலும் பேசலாம். அங்கேயெல்லாம் தமிழ்நாட்டு முதல்வரானாலும் Q ல் நின்று தான் போகணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை