உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு: குற்றப்பத்திரிகை தாக்கல்

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு: குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை:தடை செய்யப்பட்ட, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு, ஆள் சேர்த்தது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த, அப்துல் ரஹ்மான்,22, முஜிபுர் ரஹ்மான், 42 ஆகியோரை, கடந்த ஜூலையில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள, சென்னையை சேர்ந்த ஹமீது உசேன், அகமது மன்சூர் ஆகியோருடன் சேர்ந்து, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு ஆள் சேர்த்தனர்.'அவர்களுக்கு ரகசிய வகுப்பு நடத்தி, பயங்கரவாத பயிற்சி அளித்தனர். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டனர்' எனக் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை