உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு: சாதாரண பயணியர் பாதிப்பு

விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு: சாதாரண பயணியர் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விரைவு ரயில்களில், 'ஸ்லீப்பர்' பெட்டிகள் குறைக்கப்பட்டு, 'ஏசி' பெட்டிகள் அதிகரித்து இயக்கப்படுவதால், கூடுதல் கட்டணம் கொடுத்து மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.விரைவு ரயில்களில், குறைந்த கட்டணத்தில், 'ஏசி' பெட்டியில் பயணிக்கும் வகையில், மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன. இந்த வகை பெட்டிகள், தற்போது ரயில்களில் கூடுதலாக இணைத்து இயக்கப்படுகின்றன. இதனால், தற்போது, ரயில்களில் 'ஸ்லீப்பர்' எனப்படும் படுக்கை வசதி உடைய பெட்டிகளை நீக்கிவிட்டு, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கும் நடவடிக்கையில் ரயில்வே ஈடுபட்டு வருகிறது.தெற்கு ரயில்வேயில், சென்ட்ரல் - கோவை, திருவனந்தபுரம் விரைவு ரயில்களில் தலா 2; சென்னை - மங்களூரு, மேட்டுப்பாளையம் - நீலகிரி, திருச்சி - ஹவுரா விரைவு ரயில்களில் தலா ஒன்று; சென்னை - திருநெல்வேலி, சென்னை - செங்கோட்டை ரயில்களில் தலா ஒன்று; நாகர்கோவில் - மும்பை; கன்னியாகுமரி - புதுடில்லி விரைவு ரயில்களில், தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டி நீக்கப்பட்டு, மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகள், அடுத்த மாதம் இறுதி முதல் இணைத்து இயக்கப்பட உள்ளன. ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படுவதால், மக்கள், 'ஏசி' பெட்டியில், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது: விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகளை இணைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஏற்கனவே உள்ள ஸ்லீப்பர் பெட்டிகளை நீக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், விரைவு ரயில்களில், 22 பெட்டிகள் வரை மட்டும், தற்போது இணைத்து இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் கூடுதல், 'ஏசி' பெட்டிகளை இணைத்து இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்லீப்பர் பெட்டிகளை நீக்கும் முடிவை, தெற்கு ரயில்வே கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து ரயில் பயணியர் சிலர் கூறியதாவது: ஆரம்பத்தில் ரயிலில் ஓரிரு ஸ்லீப்பர் பெட்டிகளை மட்டும் நீக்கி, 'ஏசி' பெட்டிகளை இணைத்தனர். தற்போது, மூன்று ஸ்லீப்பர் பெட்டிகள் வரை நீக்கப்படுகின்றன. 'ஏசி' பெட்டிகளில் கட்டணம் அதிகம் என்பதால், வருவாய் பெருக்கும் நோக்கில், ஸ்லீப்பர் பெட்டிகளை நீக்கிவிட்டு, 'ஏசி' பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் இணைத்து வருகிறது. திடீரென இவ்வாறு பெட்டிகளை குறைப்பதால், ஸ்லீப்பரில் முன்பதிவு செய்து காத்திருப்போருக்கு, டிக்கெட் உறுதியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடருமானால், சாதாரண மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவர். எனவே, ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பை, ரயில்வே கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஈசன்
மே 31, 2025 11:03

இந்த மாற்றம் நேற்று இன்று வரவில்லை. பல வருடங்களாக மறைமுகமாக செய்ய பட்டு வரும் மாற்றம். முன்பு S13 வரை நீண்டு கொண்டு போகும் Super fast ரயில்கள், தற்போது S9 or S10 க்கு மேல் காணமுடிவதில்லை. ரயில்வே வருமானம் அதிகரிக்க யார் கொடுத்த யோசனையோ தெரியவில்லை. மேலும் மூத்த குடிமக்கள் பயண சலுகை ரத்து செய்ய பட்டதில் வரும் சேமிப்பு வேறு. அந்த வருமானத்தில் உயர் தர ரயில்கள் இயக்கம். வந்தே பாரத் ரயில்கள் இயக்கட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதில் பயணிப்பவர்கள் பணம் உள்ளவர்கள் மட்டுமே. அஸ்வினி அவர்கள் பார்வைக்கு இதையெல்லாம் யார் கொண்டு செல்வது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 31, 2025 09:57

ஏசி பெட்டிகளை விரும்புவோர் அதிகமாகிக்கொண்டிருகிறது. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முன்னர் இன்ஜினின் இழுவைதிறன் அதிகரிக்க வேண்டும், வழியில் உள்ள ரயில் நிலையங்களில் எல்லாம் அதிகப்படியான பெட்டிகளை அணுகும் அளவுக்கு பிளாட்டாரங்களின் நீளம் அதிகப்படுத்த வேண்டும்.


R Hariharan
மே 31, 2025 09:26

ஆமாம் நான் பல ரயில்களில் பார்த்துஇருக்கிறேன். இது ஒரு மறைமுக கட்டண கொள்ளை. பொதிகை எக்ஸ்பிரஸ் 8 ஸ்லீப்பர் 6 கிளிர்சாதன பேட்டி முன்றாம் வகுப்பு 4 குளிர்சாதன பேட்டி இரண்டாம் வகுப்பு. மேலும் இந்த வண்டியில் மதுரை பஸ்சேஞ்சுற்கு அதிகம் டிக்கெட் கொடுக்கிறார்கள். இப்படி இருக்கும்போதும் விருதுநகர் செங்கோட்டை செக்டர் பயணிகள் என்ன செய்வார்கள். பல ரயில்களில் ஸ்லீப்பர் கோஆச்சு குறைக்கப்பட்டுயிர்க்கு


பாமரன்
மே 31, 2025 09:25

இது வந்தே தீர வேண்டிய தண்டனை/ மாற்றம்... வந்தே பாரத்து நொந்தே பாரத்தெல்லாம் விடறதே அதுக்காகதான்...‌எல்லா எடத்துக்கும் விட முடியாதுங்கிறதால் மெதுவா ஏசியாக்கி அப்பாலிக்கா லேசா பெயிண்ட்டிங் டிங்கரிங் பண்ணி பேரை மாத்திடுவோம்ல...??? இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை பாமரணுக்கானது... மேலை நாடுகளில் உள்ளதை போல பணம் படைத்தவனுக்கல்லன்னு இந்த ஆட்சியாளர்கள் புரிஞ்சிக்கிற மாதிரி தெர்ல... அனுபவிக்க வேண்டியதுதான்... ஆட்டோ பயணம் மாதிரி


Varadarajan Nagarajan
மே 31, 2025 07:38

சும்மா எதிர்ப்பு தெரிவிக்கணும் எனபதற்காக எல்லாத்தயும் எதிர்கின்றதே சிலரது வேலை. தென்மாவட்டங்களிலிருந்து தற்சமயம் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் தொலைதூரங்களுக்கு பயணிப்பவர்களைவிட படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன தனியார் சொகுசு பேருந்துகளில் பயணிப்பவர்கள் அதிகம். அவற்றின் கட்டணங்கள் எவ்வளவு வசூலிக்கின்றார்கள் என ஒப்பிட்டுப்பாருங்கள். அப்பொழுதுதான் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்று தெரியும். 10 ரூபாய்க்கு மின்சார ரயிலில் பயணம் செய்துவிட்டு அதிலிருந்து இறங்கி நடைமேடையிலேயே 20 ரூபாய்க்கு மினரல் பாட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு செல்லும் மக்கள் அந்த 10 ரூபாய் கட்டணத்தை 2 ரூபாய் உயற்றினால் எதிர்ப்பார்கள். நெல்லையிலிருந்து தற்சமயம் இயக்கப்படும் வந்தேபாரத் ரயில்களில் டிக்கெட் கிடைப்பதில்லை என்பதை முதலில் அறியுங்கள்


Kanns
மே 31, 2025 06:56

People Want to Throw Out Useless ModiBJP Rail Minister. Ban All FreePasses-Freebies-Concessiin Sack All NonWorkinh Union Leaders Privatise Railways But Under Govt Control


vivek
மே 31, 2025 08:35

may be useless kanns


Kasimani Baskaran
மே 31, 2025 06:54

ஏ சி கட்டணத்தை ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு இணையாக குறைக்கச்சொல்லலாம் - அதை விட்டுவிட்டு இன்னும் கற்காலத்திலேயே பயணிக்க வேண்டும் என்கிறார்கள்.


சமீபத்திய செய்தி