உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு: போலீஸ் விளக்கம்

வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு: போலீஸ் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின் 198 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போக்குவரத்து போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ljsf4lkh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்: வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம். வேறொருவர் பெயரில் உள்ள வாகனத்தில் ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500, 2வது தடவை என்றால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும். நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதித்த கட்டுப்பாடுகள் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு விளக்கமளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
மே 02, 2024 11:15

அச்சகம் நடத்துபவர்கள் கூட PRESS ன்னு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


Ramesh Sargam
மே 01, 2024 22:10

வாகன ஓட்டிகள் கேட்கிறார்கள், மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும்போது, நாங்கள் எங்கள் சொந்த வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டால் தவறா என்று? Any பதில்?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ