மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
சென்னை: நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான முதல்வரின் பரிந்துரை மீது கவர்னர் இன்னும் முடிவெடுக்காத நிலையில், உயர்நீதிமன்றம் அது குறித்து பரீசிலிக்க முடியுமா? என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் எஸ்.ஏ. பாஷா, சாகுல் அமீது, ஜாகீர் உசேன், விஜயன், பூரிகமல் உள்ளிட்ட 49 ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர். நீண்ட காலம் சிறையில் உள்ள இவர்களை, நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முன்னர் விசாரணைக்கு வந்தபோது, ‛‛முதல்வரின் பரிந்துரையின்பேரில் 49 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான பரித்துரை கவர்னர் முன் நிலுவையில் உள்ளது'' என தமிழக அரசு விளக்கம் அளித்து இருந்தது. 17 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.இந்நிலையில், நீண்ட நாள் சிறைவாசிகள் ஷம்மா உள்ளிட்ட இருவரின் விடுப்பை நீடிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணை வந்தது. அவர்களது விடுப்பை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.தொடர்ந்து கைதிகள் விடுதலை குறித்த பரிந்துரை ஆளுநர் முன் நிலுவையில் உள்ள நிலையில், அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து உயர் நீதிமன்றமே பரிசீலிக்க முடியுமா என்று கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக்கிடம் கேள்வி எழுப்பி விசாரணையை ஒத்திவைத்தனர்.
10 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago