உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்.மாணிக்கவேலுக்கு நிம்மதி: முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

பொன்.மாணிக்கவேலுக்கு நிம்மதி: முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

மதுரை : சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக, சி.பி.ஐ.,பதிந்த வழக்கில், முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் வழங்கியது.தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்த போது, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா, கோயம்பேடு போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ், 2017ல் பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின், ஜாமினில் வெளியே வந்த காதர் பாஷா, 'தீனதயாளனுக்கு ஆதரவாக பொன்மாணிக்கவேல் செயல்பட்டார். அவரை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க, என் மீது பொய் வழக்கு பதிந்து, கைது செய்தார். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.சி.பி.ஐ.,வழக்கு பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பொன்மாணிக்கவேல் மீது, டில்லி சி.பி.ஐ.,போலீசார் வழக்கு பதிந்தனர். 'இதை சி.பி.ஐ.,விசாரிக்க அதிகாரமில்லை. உள்நோக்கில் சட்டவிரோதமாக வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, பொன்மாணிக்கவேல், உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.இதில் இரு தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம், பொன்மாணிக்கவேலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kesavan
ஆக 31, 2024 07:17

முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி யார்


Bharathanban Vs
ஆக 30, 2024 18:47

நூறு சதவீதம் நேர்மையாளர் பொன்மாணிக்கவேல். அவர் மீது இதுபோன்ற அபத்தமான வழக்குகள் போடுவதே கே வலம்... அவரை கைதுசெய்ய சிபிஐ துடிப்பதிலிருந்தே, அந்த அமைப்பின் நேர்மை மீதும் சந்தேகம் வருகிறது..


அன்பு
ஆக 30, 2024 23:31

இதற்கு திமுக அதிமுக பங்காளிகள் பின்னணியில் உள்ளார்கள். சிலை கடத்தல் இவர்கள் தலைமையில் நடப்பது உண்மை. திரு பொன் மாணிக்கவேல் இயங்க முடியாத அளவுக்கு குடைச்சல் கொடுத்து வருபவர்கள்.


Jysenn
ஆக 30, 2024 17:01

Another Nambi Narayanan?


ponssasi
ஆக 30, 2024 16:22

தீனதயாளும், காதர்பாஷா இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் போல்தெரிகிறது, தீனதயாள் கைதுசெய்யப்பட்டு அந்த வாக்குமூலத்தின் பேரில் காதர்பாஷா கைதுசெய்யப்பட்டுள்ளார். இருவரும் சேர்ந்து பொன்மாணிக்கவேலை பழிவாங்க போகிறார்கள். மாநில அரசு மறைமுகமாக இதை ஆதரிக்கிறது போல தோன்றுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை