உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கம்!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வீடுதோறும் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இன்னும் சீராக இப்பணி நடந்திருந்தால், நீக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி இருக்கும் என கூறப்படுகிறது.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்., 27ல் துவங்கியது. முதல் கட்டமாக, வீடு வீடாக எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rcjc6rhc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வெளியீடு

எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்புக்கு பின், தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.பின், அர்ச்சனா அளித்த பேட்டி:வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணி கடந்த 14ம் தேதி முடிக்கப்பட்டது. மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த அக்., 27ம் தேதியின்படி, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 6 கோடியே 41 லட்சத்து 14,587. தற்போது வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 43 லட்சத்து 76,755 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2 கோடியே 66 லட்சத்து 63,233 பெண்கள்; 2 கோடியே 77 லட்சத்து 6,332 ஆண்கள்; 7,191 மூன்றாம் பாலினத்தவர்; 4 லட்சத்து 19,355 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர் கணக்கெடுப்பு பணியின்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் குறைந்தபட்சம் மூன்று முறை, வீடுதோறும் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.இறந்தவர்கள் 26 லட்சத்து 94,672; இடம் பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் 66 லட்சத்து 44,881; ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 39,278 பேர் என, மொத்தம் 97 லட்சத்து 37,831 பேர், பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர்.

சரிபார்ப்பு

பட்டியலில், 2002, 2005ம் ஆண்டு விபரங்களை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை வாக்காளர் பதிவு அலுவலர்கள் சரிபார்த்து, ஆவணங்கள் ஏதேனும் தேவையெனில், மீண்டும் விபரம் கேட்கப்படும்; அதற்கான பணிகள் இனி துவங்கும்.தமிழகத்தில் சோழிங்கநல்லுார், பல்லாவரம், ஆலந்துார் சட்டசபை தொகுதிகளில், அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து, எந்த பெயரையும் உடனே நீக்க முடியாது. அதற்கு வழிகாட்டுதல்கள் உள்ளன. அதன்படியே, பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.விண்ணப்ப படிவங்கள் பெற்றவர்களில், 12,000க்கும் அதிகமானோர் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுவரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், 5 லட்சத்து 19,277 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சோழிங்கநல்லுார் தொகுதி முதலிடம்

தமிழகத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு பணிக்கு பிறகு, வரைவு வாக்காளர் பட்டியலை, தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. தொகுதி வாரியாக வாக்காளர் நீக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லுார் தொகுதியில், அதிகபட்சமாக, 2.18 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து பல்லாவரம் தொகுதியில், 1.49 லட்சம்; ஆலந்துார் தொகுதியில், 1.32 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக, ஜெயங்கொண்டம் தொகுதியில் 1,138 வாக்காளர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர்.

இளம் வாக்காளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம்

வரும் 2026 ஜன., 1ம் தேதி அல்லது அதற்கு முன், 18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள், படிவம் 6ஐ பூர்த்தி செய்து, உறுதிமொழி படிவத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தகுதியான இளம் வாக்காளர்களையும் பதிவு செய்வதற்காக, தமிழகம் முழுதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என, தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உங்கள் பெயர் உள்ளதா? இணையதளத்தில் பார்க்கலாம்!

* பொது மக்கள் தங்கள் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை, www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் * பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்புக்கு படிவம் 6ஐ பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம். பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்போர், படிவம் 7, முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவற்றை வரும் ஜனவரி 18ம் தேதிக்குள் வழங்கலாம். * மேலும், www.elections.tn.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம். அவற்றை ஆய்வு செய்ய, 234 தேர்தல் அலுவலர்கள் மற்றும் 1,776 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளனர்* பெயர் சேர்க்கப்படாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளவர்கள் பற்றிய ஓட்டுச்சாவடி வாரியான பட்டியல்கள், பொது மக்கள் பார்வைக்காக பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். தங்கள் பெயர் இடம்பெறாததற்கான காரணத்தை அறியலாம்* இந்த பட்டியல்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியல், அடுத்த ஆண்டு பிப்., 17ம் தேதி வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Venkataraman
டிச 20, 2025 17:07

தமிழகத்தில் 97 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறா ர்கள். இது மிகவும் குறைவு. இன்னும் 90 லட்சம் பேர் இடமாற்றம் செய்திருப்பார்கள். அவர்களை தேர்தல் அதிகாரிகள் நேராக போய் சோதிக்கவே இல்லை. ஆனால் அவர்கள் தேர்தல் அலுவலகத்தில் வந்து விண்ணப்பத்தை கொடுத்து விட்டு போய் விட்டார்கள். முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் ஒரே முகவரியில் 300 வாக்காளர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். திமுகவினர் போலி வாக்காளர் பட்டியலை தயாரித்து தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். தேர்தல் ஆணையமும் எதிர்கட்சிகளும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.


GUNA SEKARAN
டிச 20, 2025 16:47

அப்படியில்லை. எங்கள் பகுதி மட்டுமல்ல, விசாரித்து அறிந்த வரையில் பெரும்பாலும் மூன்றுமுறைக்கு மேல் வந்தார்கள்.


Balasubramanian
டிச 20, 2025 16:21

65 சதவிகிதம் ஓட்டு பதிவு அதில் பத்து பதினைந்து ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்ற நிலைமை இனி கிடையாது! 70 முதல் 75 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறலாம்! நிஜ வாக்குகள் பல் முனை போட்டியினால் பிரியும்! ஐநூறு முதல் ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி! இந்நிலையில் தொங்கு சட்ட மன்றம் உருவாக வாய்ப்பு! கூட்டணி சரியாக அமைந்தால் ஆளும் கட்சி நிச்சயம் ஆட்சியை இழக்கும்!


SUBRAMANIAN P
டிச 20, 2025 13:44

ஏற்கனவே ஒட்டு போட்டுக்கிட்டு இருந்த உண்மையான வாக்காளர்கள் பெயரையெல்லாம் கூட நீக்கிவிட்டார்கள்.. அதற்கு காரணம் படிவத்தை கொடுக்க இவர்கள் ஒருமுறைதான் செல்வார்கள் அதுவும் வார நாட்களில் குடும்பத்தில் இருக்கும் இருவரும் வேலைக்கு செல்வதால் நிறையவீடுகள் பூட்டியே கிடக்கும். மீண்டும் வருவதாக சொல்லி போக்குமட்டுமே காட்டுவார்கள். நாம் இதற்க்காக லீவு எல்லாம் போட்டுக்கிட்டு இவர்களுக்காக காத்திருக்கமுடியாது. வருவதாக சொல்லி வராமலும் போவார்கள். கடைசியில் நம்மை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிடுவார்கள். ஓட்டுப்போடும் எண்ணமே நமக்கு வெறுத்துவிடும். கேடுகெட்ட ஊழல் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகள் இருக்கும்வரை நம்நாட்டை திருத்தமுடியாது. இந்த திட்டத்தை சரியான முறையாக செயல்படுத்தவில்லை என்பதே 100% உண்மை.


Rengaraj
டிச 20, 2025 13:05

தொகுதி மறுவரையறை / சீரமைப்பு ஆகியவற்றை செய்யும்போது அரசு எதிர்பார்க்கும் நிறைய பிரச்சினைகள் இந்த SIR மூலம் ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டு விடும் என்று நம்பலாம். தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. 39 எம்பிக்கள் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சில பாராளுமன்ற தொகுதிகள் இரு வெவ்வேறு மாவட்ட தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஏன், ஒரு சில சட்டசபை தொகுதிகளே இரண்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒரே ஒரு மாவட்ட கல்வி அதிகாரி, ஒரே ஒரு மாவட்ட ஆட்சியர், ஒரே ஒரு மாவட்ட எஸ். பி, ஒரே ஒரு மாவட்ட நீதிமன்றம், ஓரே ஒரு மாவட்ட அரசு மருத்துவ டீன், இப்படி ஒவ்வொன்றும் மாவட்டத்துக்கு ஒன்று என்று இருக்கும்போது மாவட்டத்துக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி என்று மறுவரையறை செய்தால் என்ன ? மாவட்ட மக்கள் தொகை அதிகம் இருந்தால் இரண்டு பாராளுமன்ற தொகுதி என்று தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் நிர்வாக வசதி எளிதாக இருக்கும். மாவட்டத்தில் பிரச்சினை என்றால் அந்த அந்த மாவட்ட எம்பி யும் எம்.எல்.ஏக்களும் ஒன்று சேர்ந்து விவாதிக்கவோ பிரச்சினையை தீர்க்கவோ முடியும். ஒரே எம்பி , ஒரே எம்.எல்.ஏ ரெண்டு மாவட்டங்களில் நாட்டாமை பண்ணமுடியாது. வரும்காலங்களில் மக்கள்தொகை மற்றும் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு நடக்கும்போது இந்த SIR அந்த சீரமைப்புக்கு வழிவகுக்கும்.


vbs manian
டிச 20, 2025 12:08

வாழ்த்துக்கள் மேடம். பிரமாதம்.


vbs manian
டிச 20, 2025 12:07

வெறும் மூவாயிரம் வோட்டு வித்தியாசத்தில் கழகப்புள்ளி சென்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.


Rengaraj
டிச 20, 2025 11:48

இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டு சதியால் மட்டுமே சென்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி நிறைய இடங்களில் தனது வெற்றியை பறிகொடுத்தது இப்போது அம்பலமாகி விட்டது. திமுக, அதிமுக ஆகிய இரண்டுமே இத்தனை காலம் தங்களுக்கு பெரிய வாக்கு வங்கி உள்ளதாக பொய்யான பிம்பத்தை கட்டமைத்து மக்களை முட்டாளாக்கி வந்திருக்கின்றன. இத்தனை காலமாக இந்த போலி வாக்காளர்கள் எண்ணிக்கைதான் நிறைய தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானித்துவந்திருக்கின்றன. ஒவ்வொரு பூத்திலும் எதிர்க்கட்சி பூத் ஏஜெண்டுகள் விலை போகின்றனர். அதிகார துஷ்பிரயோகம், ஏரியா தாதாக்கள் மிரட்டல், அரசு அதிகாரிகள் துணை ஆகியவற்றை கொண்டு பூத் ஏஜெண்டுகள் விலைக்கு வாங்கப்பட்டு ஓட்டுசதவீதம் அதிகரிக்க உதவி புரிகின்றனர் என்பதை இந்த நீக்கப்பட்ட போலி வாக்காளர் எண்ணிக்கை பறை சாற்றுக்கிறது. பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் இத்தனைகாலம் ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் நேரம் முடிவதற்கு முன்னரோ அல்லது தேர்தல் நேரம் ஆரம்பித்த உடனேயோ , தங்கள் பூத் ஏஜெண்டுகள் மூலம் ஒன்றுக்கொன்று கள்ளக்கூட்டணி அமைத்துக்கொண்டு தங்களுக்கு சாதகமாக வாக்குகளை பதிவிட்டு வந்திருக்கின்றன என்பதையும் இந்த போலி வாக்காளர்கள் எண்ணிக்கை சொல்லிவிடுகிறது. பாஜக தற்போது திமுகவோடு தொகுதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தொகுதிகளை கேட்டுவாங்கும்போது இந்த போலி வாக்காளர் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டு பேசவேண்டியது மிகஅவசியம்.


ram
டிச 20, 2025 11:26

இதுவும் கூட ஒழுங்கா நடத்த வில்லை இந்த தேர்தல் கமிஷன், திருட்டு திமுக ஆட்கள் மேற்பார்வையில் மூலம் தான் எல்லாம் நடந்தது. ஏன் என்று தெரிய வில்லை அவனுக சொல்லுவதை போல மத்திய அரசு, நீதிமன்றம், இப்போது தேர்தல் கமிஷன் ஆல் பயப்படுகிறார்கள் இந்த தீய திருட்டு திமுகவை பார்த்து. ஒரு தீப பிரச்சனையை முடிக்காமல் எப்படியெல்லாம் கொண்டு செல்கிறான்கள் அதுவும் ஹிந்துக்கள் போடும் கோவில் பணத்தில். இதற்கு இந்த திருடன்களை பாரட்டவேண்டும்.


GOPAL MURALI
டிச 20, 2025 10:12

இது சரியான நடைமுறை , தயவு செய்து இனி இறப்பு சான்றிதல் கொடுக்கும் முன்பு வாக்காளர் அடையாள உரிமையை நீக்கி விட்டு இறப்பு சான்றிதழ் தரவும். இல்லையேல் மீண்டும் இது போன்ற தவறு நடந்து கொண்டே இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை