உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்வப்பெருந்தகையை காங்.,கில் இருந்து நீக்குங்க: ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கடிதம்

செல்வப்பெருந்தகையை காங்.,கில் இருந்து நீக்குங்க: ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கடிதம்

சென்னை: '' ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும்'', என எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்., தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும். புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார். இக்கொலை வழக்கில் ஏன் கைது செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால் தான் கைதாகவில்லை எனவும் கூறுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ADVOCATE DALIT PRAVINA G MBBS BL
செப் 20, 2024 00:49

RSS தலைவர் மோகன் பகவத் க்கு தொடர்பு இல்லையா ? அதானி.... சென்னை துறைமுகத்திற்கு தொடர்பு இல்லையா ? BJP பனியா நரேந்திர மோடி அமித் ஷா வுக்கு தொடர்பு இல்லையா ? தமிழக மாநிலத்தில் 1 வருடத்திற்கும் முன்பாகவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஸ்கெட்ச் போடப்பட்டு இருக்கிறது இத்தனை ரவுடிகளுக்கு ஸ்கெட்ச் போட தெரிந்திருக்கும் போது இத்தனை ரவுடிகளின் ஸ்கெட்ச் எப்படி தமிழக காவல்துறைக்கு தெரியாமல் இருந்திருக்கும்? தமிழகத்தில் தெருவுக்குத் தெரு ஏரியாவுக்கு ஏரியா... அரசியல் உளவாளிகள் இருக்கிறார்கள் பாஜக அண்ணாமலைக்கும் திமுக ஸ்டாலினுக்கும் விசிக திருமாவளவனுக்கும் சீமான் ஏன் BSP உள்கட்சியிலும் தெரிந்து தான் இருக்கும்..... அரசியலில் இடம் காலி என்றால் வரவேற்கவே செய்வார்கள் பாஜக நரேந்திர மோடி கேங் எதிர்க்கட்சியில் இருக்கும் ஆட்களையும் பனியா வியாபாரிகளின் பணத்தை கொடுத்து வேலை செய்ய சொல்கிறார்கள் குற்றவாளி என்றால் யாராக இருந்தாலும் எந்த கட்சியில் இருந்தாலும் குற்றத்திற்கான ஆதாரம் இருந்தால் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தால் கூட என்ன கைது செய்ய வேண்டியது தானே ? குற்றம் இல்லை என்றால் இப்படிப்பட்ட சர்ச்சைகளை எழக்கூடாது தானே குற்றம் சுமத்துபவர்கள் தெளிவோடு பேசட்டும் வழக்கறிஞர் தலித் பிரவீணா MBBS BL President ஆல் இண்டியா தலித் சமாஜ் மற்றும் தமிழ் முன்னேற்ற கழகம் 19 செப்டம்பர் 2024


sankar
செப் 19, 2024 21:30

புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார்- அஞ்சுகட்சி அம்மாவாசை


nagendhiran
செப் 19, 2024 20:34

பொசுக்குனு இப்படி சொன்னா எப்படி?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை