உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் கட்டட உயர கட்டுப்பாடு அரசாணை ரத்து: உயர் நீதிமன்றத்தில் தகவல்

மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் கட்டட உயர கட்டுப்பாடு அரசாணை ரத்து: உயர் நீதிமன்றத்தில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் உள்ள விதி மீறல் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில், 'கட்டடங்களுக்கு உயர கட்டுப்பாடு நிர்ணயித்த அரசாணையை உயர் நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது' என, மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை குமார் 2011ல் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச் சுவரிலிருந்து 1 கி.மீ.,சுற்றளவில் 9 மீ., உயரத்திற்கு மேல், விதிகளை மீறி பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை கோவில் கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ளன. விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஆக., 6ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு: விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 1869 கட்டடங்களின் உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட கட்டட திட்ட வரைபடத்தை மாநகராட்சி கமிஷனர், உள்ளூர் திட்டக் குழுமத்திடம் (எல்.பி.ஏ.,) சமர்ப்பிக்க வேண்டும். விதிமீறல் இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.மாநகராட்சி தரப்பு: இந்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவர்கள், 'கோவிலைச் சுற்றிலும் 1 கி.மீ., சுற்றளவில் 9 மீ., உயரத்திற்கு மேல் கட்டுமானம் கட்டக்கூடாது என 1997ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசாணை தற்போது அமலில் இல்லை. அது தங்களுக்கு பொருந்தாது. இக்கட்டடங்கள் 1997க்கு முன் கட்டப்பட்டவை. விதிமீறல் எதுவும் இல்லை,' என ஆட்சேபனை தெரிவித்தனர். உயரக்கட்டுப்பாடு தொடர்பான அந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துவிட்டது. இவ்வாறு தெரிவித்தது. மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. நீதிபதிகள் நாளைக்கு (நவ.,8) ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V GOPALAN
நவ 07, 2024 13:42

ஓவ்வவொரு மாவட்டமும் அங்குள்ள கோயில்களை கொண்டுதான் வளர்ந்துள்ளது கேடுகெட்ட சங்கிகளும திராவிடர்களும் எருமை போன்று எந்த ஆட்சியாளர்களின் அக்கிரமத்தை எதிர்ப்பதே இல்லை.


Rasheel
நவ 07, 2024 13:04

இதை காட்சிகள் எதிர்க்க வேண்டும். மதுரை என்பதே கோவில் உள்ளதால் தான் பெருமை. கோபுரத்தை மூடி மறைத்தல் இவருக்கு லாபம் சம்பாதிக்க?


Sampath Kumar
நவ 07, 2024 09:27

இதுக்கு நம்ம பக்கத்தால் ஏன் ஏதிருப்பு தெரிவிக்க வில்லை? திராவிட மாடல் ஆட்சியில் ஹிந்துமத வெறுப்பு என்று எல்லாம் உளறித்திரியும் சங்கிகள் வாய் மூடி நிற்பது ஏனோ மதுரை மீனாட்சி கோபுரம் மாதுரி உள்ள அனைவரும் ஏந்த இடத்தில இருந்த பார்த்தாலும் தெய்ரயும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது திராவிட மாடல் ஆட்சில் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொன்னவர்கள் இதை ஏத்திற்கு துணியவில்லை ஏன் ?


N.Purushothaman
நவ 07, 2024 08:11

புரையோடிய லஞ்சம், ஊழல், அணைத்து மட்டத்திலும் பரவி உள்ளதால் புராதன சின்னங்கள், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிற்கு மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டு உள்ளது .... அணைத்து கோயில் நகரங்களிலும் ஆய்வு நடத்த வேண்டியது கட்டாயம் .....எங்கு பார்த்தாலும் விதி மீறல்கள், சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புக்கள் என தமிழகமே அல்லோகலப்பட்டு கொண்டு இருக்கிறது ....நகர்ப்புற திட்டமிடல்கள் சர்வதேச அளவிற்கு இல்லாமல் பாதுகாப்பு குறைபாடுகளுடன் தான் உருவாகி கொண்டு இருக்கிறது ...


புதிய வீடியோ