உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை; இந்திய குடியரசு கட்சி அறிவிப்பு

தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை; இந்திய குடியரசு கட்சி அறிவிப்பு

விழுப்புரம் : ''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை,'' என, இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் தமிழரசன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர, பல மாவட்டங்களில், உள்ளாட்சி பதவிக்கான காலம் முடிந்துள்ளது. இதற்கான தேர்தலை எப்போது நடத்தப் போகின்றனர் என்பது குறித்து, தமிழக அரசு தெளிவான அறிவிப்பு வெளியிடவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்குவதால், யாரும் உள்ளாட்சி தேர்தல் பற்றி கவலைப்படவில்லை. துாய்மை பணியாளர் இறந்தால், பணத்தை நிவாரணமாக அரசு வழங்குகிறது. அப்படியென்றால், உயிரின் விலை, பணம் மட்டும் தானா? அரசு, பொது நிறுவனங்களில் 50 பேர் துாய்மை பணியாளர்களாக பணியாற்றினாலே, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, ஆங்கிலேயர் காலத்து சட்டமே கூறுகிறது. இதை திருத்தம் செய்து தான், தற்போது, துாய்மை பணியாளர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக்கி விட்டனர். எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என கூறுகின்றனர். ஆனால், எத்தனை தாழ்த்தப்பட்டவர் அர்ச்சகர் ஆகி உள்ளனர் என்பதை சொல்லவில்லை. இது தான் சமூக நீதியா? துாய்மை பணியாளர்களை நிரந்தரம் ஆக்குவது, ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் கொண்டு வருவது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது என எந்த விஷயத்தையும் தி.மு.க., அரசு செய்யவில்லை. அதனால், அக்கட்சி தவிர்த்து யாரோடும் கூட்டணி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

chennai sivakumar
ஆக 25, 2025 17:44

இப்படி ஒரு கட்சி இருப்பது இப்பொழுதுதான் தெரியும்.


ramesh
ஆக 25, 2025 17:14

தமிழ் நாட்டின் மிக பெரிய 1 கோடி வாக்காளர்களை கொண்ட குடியரசு கட்சி dmk கூட்டணியை விட்டு விலகிவிட்டது . ஸ்டாலின் கடும் அதிர்ச்சி . லெட்டர் பேடு கட்சிகளின் நகைசுவை


SJRR
ஆக 25, 2025 11:10

ஓ, இவர்கள் இந்த நான்கு வருடங்களாக திமுக கூட்டணியில் தான் இருந்தார்களா?


நாடோடி
ஆக 25, 2025 07:45

அய்யய்யோ 180 MLA வச்சுருக்க நீங்க திடீர்னு இப்படி செய்யலாமா?


raja
ஆக 25, 2025 06:43

சரி ஓரி விக்கெட்டு காலி..திருட்டு திராவிட ஓங்கோல் கோவால் புர கொள்ளையனுக்கு முதல் ஆப்பு...


Raj Kamal
ஆக 25, 2025 10:57

ஆப்புக்கு ஒரு மரியாதையை வேணாமா ராஜா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை