உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால்நடைகளுக்கு மூலிகை சிகிச்சை அளிக்க ஆராய்ச்சி

கால்நடைகளுக்கு மூலிகை சிகிச்சை அளிக்க ஆராய்ச்சி

சென்னை:“கால்நடை மருத்துவத்தில், பாரம்பரிய மூலிகை மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்து, ஆராய்ச்சி நடந்து வருகிறது,” என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்தார். சென்னை வேப்பேரியில் உள்ள, அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின், 121வது ஆண்டு விழா நேற்று நடந்தது. அப்போது, பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் அளித்த பேட்டி:நாட்டிலேயே சிறந்த கால்நடை மருத்துவமனை இங்கு உள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைந்த விலையில் உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது. சமீபத்தில், கால்நடைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்க, மருந்தகம் துவக்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு பயன் அளிக்கக்கூடிய, ஆராய்ச்சி பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். நம் மண்ணை சார்ந்த, ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவைகளை பாதுகாக்கவும், அவற்றின் கழிவுகளை பயன்படுத்துவது குறித்தும், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. கால்நடைகளுக்கான அலோபதி மருத்துவ முறையில், சில இடர்பாடுகள் இருப்பதால், வரும் காலத்தில் பாரம்பரிய முறையில், மூலிகை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, கால்நடை பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் பங்கேற்ற, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் கூறுகையில், “கல்லுாரியின் முன்னாள் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். கால்நடை மருத்துவக் கல்லுாரியின், 125வது ஆண்டு விழா நடைபெறும்போது, சிறப்பு தபால் தலை வெளியிடப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி