உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்; சட்டசபை ஒத்திவைப்பு

மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்; சட்டசபை ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏ., இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று (ஜன.,06) 9.30 மணிக்கு கூடியது. 9.29 மணிக்கு சபைக்கு கவர்னர் வந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. மூன்று நிமிடங்களில் தன் உரையை வாசிக்காமல், சபையை விட்டு கவர்னர் வெளியேறினார். அச்சிடப்பட்ட கவர்னர் உரையில் இடம் பெற்ற வாசகங்களை, சபாநாயகர் அப்பாவு படித்தார். அவர் படித்ததை மட்டும் சபைக்குறிப்பில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை, சபை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் கொண்டு வந்தார். குரல் ஓட்டெடுப்பு வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜன.,07) சட்டசபை காலை 9.30 மணிக்கு 2வது நாளாக கூடியது. அவை கூடியதும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏ., இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்மொழி ராஜதத்தன் ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு , சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்வேள்
ஜன 07, 2025 22:17

ஆனால் இந்தியாவின் மூத்த அணு விஞ்ஞானி சிதம்பரம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் கிடையாது..காரணம் அவர் பாரதத்துக்கு சேவை செய்தார்..2. அவர் உயர் வகுப்பினர்.ஆதலால் திமுக கும்பலுக்கு வெறுப்பு


Murugesan
ஜன 07, 2025 13:33

கேவலமான கேடுகெட்ட அயோக்கியனுங்க


அப்பாவி
ஜன 07, 2025 11:46

ஓபி அடிச்சே சம்பளம் வாங்காறாங்க. இவிங்க கீழே வேலைபார்க்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் எப்புடி வேலை செய்வாங்க. தண்ட கும்பல்.


Abhivadaye
ஜன 07, 2025 10:40

இரங்கல் தீர்மானம் ஓகே . அப்பறம் வேலை செய்ய கூடாதுன்னு எந்த சட்டம் சொல்லுது? ஓபி அடிக்க்னும்னா ஒருமித்த கருத்தா?


sundarsvpr
ஜன 07, 2025 10:32

சட்டசபை என்பது 234 எம் எல் ஏ கள் உள்ளடங்கியது. பல அங்கத்தினீர்கள் பேசுவதே யில்லை. ஆனால் அவர்கள் மீண்டும் தேர்ந்துஎடுக்கப்படுகிறார்கள் மீண்டும் பேசுவதிலை. நாற்காலியில் உட்காருவதக்காக பயண படி நாட்படி சம்பளம். இவர்கள் திறமைசாலிகள். இவரை தேர்ந்துஎடுத்தமக்களை எப்படி அழைப்பது? வீட்டில் வயசான கிழடுகள் திண்ணையில் படுத்துஇருப்பதுபோல் இவர்கள் சட்டமன்றத்தில் இருக்கிறார்கள் . அவ்வளவுதான்.


Barakat Ali
ஜன 07, 2025 10:12

கூடும் நாட்களோ குறைவு .... இவற்றில் வீண் பேச்சுக்கள், வெளிநடப்புக்கள், வெளியேற்றம், ஆளுனருடன் வம்பு ..... மக்கள் பிரச்னைகளை பற்றி பேச நேரமில்லை .... ஆனால் பெரிய ஜனநாயக நாடு .....


Kasimani Baskaran
ஜன 07, 2025 10:09

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கவில்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை