இன்று மறுமதிப்பீடு மதிப்பெண் வெளியீடு
சாலை போக்குவரத்து நிறுவனம் சார்பில், அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனர்களுக்கான தேர்வுகள், கடந்த மாதம் 27ம் தேதி நடந்தன. 22,492 பேர் விண்ணப்பித்ததில், 19,405 பேர் தேர்வெழுதினர். தேர்வுகளை நடத்திய அண்ணா பல்கலை, இன்று, 'https://tancet.annauniv.edu/tancet/irt/index.php என்ற இணையதள இணைப்பின் வாயிலாக, முடிவுகளை வெளியிடுகிறது. பதிவெண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து அறியலாம். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான, 'தாட்கோ' சார்பில், எஸ்.சி., - எஸ்.டி., பட்டதாரிகளுக்கு, 'ட்ரோன்' தயாரிப்பு, சோதனை, பறக்கும் தொழில்நுட்பம், 'எம்பெடட் சென்சார்' சோதனை, 'பிரின்டட் சர்க்யூட் போர்டு' வடிவமைப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சியின்போது, உணவு, தங்குமிடமும் வழங்கப்படும். மேலும் தகவல்களை, 'www.tahdco.com' என்ற இணையதளத்தில் அறியலாம்.