வருவாய் துறை அலுவலர்கள் 48 மணி நேர ஸ்டிரைக்
தமிழக வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில், காலியாக உள்ள, 564 உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல்; 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிக அளவில் நடத்துவதை குறைத்து, வாரத்துக்கு இரண்டு முகாம்கள் நடத்தல் உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளனர். அதன்படி சேலத்தில் வருவாய் துறையினர் பணியை புறக்கணித்து, காலை, 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அலுவலக உதவியாளர் முதல், தாசில்தார் வரை வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால், சேலம் மாவட்டத்தில், 14 தாலுகா, 4 ஆர்.டி.ஓ., - கலெக்டர் அலுவலக பணிகள் வெகுவாக பாதிக்கும். - நமது சிறப்பு நிருபர் -